வங்கக்கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் கடற்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், படகுகளை அந்தந்த மீன்பிடித் தளங்களிலே பாதுகாப்புடன் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.