வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 19 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.