சீனாவின் மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டம் டிசம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.
2024ஆம் ஆண்டின் பொருளாதாரப் பணிகளைத் தொகுத்து, தற்போதைய பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்ததோடு, 2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரப் பணிகளை ஏற்பாடு செய்வதாகவும் ஷிச்சின்பிங்கின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு, சீனாவின் 14ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை நனவாக்குவதற்கான முக்கிய ஆண்டுக்காலமாகும். 2024ஆம் ஆண்டின் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த நிலை சீராக உள்ளது. உயர் தரமான வளர்ச்சி முன்னெடுத்து செல்லப்படுகிறது.
முக்கிய இலக்குகள் சுமுகமாக நிறைவேற்றப்பட உள்ளன. சீன நவீனமயமாக்கலில் முக்கிய காலடி எடுத்து வைத்ததுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வளர்ச்சிக் கருத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வந்து, புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்கி, உயர்தரமான வளர்ச்சியை முன்னேற்றி, விரிவான சீர்திருத்தங்களை ஆழமாக்கி, வெளிநாட்டுத் திறப்பு நிலையை விரிவாக்கி, நவீனமயமான தொழிற்துறை அமைப்பை உருவாக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, மேலும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கையை செயல்படுத்தி, உள்நாட்டுத் தேவையை விரிவுபடுத்தி, அறிவியல் தொழில்நுட்பங்களின் புதுமை கண்டுபிடிப்புகளையும் தொழிற்துறையின் புத்தாக்கங்களையும் ஒன்றாக சேர்த்து, குடியிருப்பு சொத்துகளுக்கான சந்தை மற்றும் பங்குச் சந்தை ஆகியவற்றை நிதானப்படுத்தி, முக்கிய துறைகளில் இடர்பாடு மற்றும் வெளிப்புறத் தாக்கத்தைக் கையாள வேண்டும். பொருளாதாரத்தின் தொடர்ச்சியான மீட்சி மற்றும் சீரான வளர்ச்சியை முன்னெடுத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை இடைவிடாமல் உயர்த்த வேண்டும். இம்முயற்சிகளுடன், 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்றி, 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு நல்ல அடிப்படை ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தப் பணிக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
2025ஆம் ஆண்டு, மேலும் ஆக்கப்பூர்வமான நிதி வரவுச்செலவுக் கொள்கையையும் உரிய அளவிலான தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையையும் செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.