2023 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளில் 86 இந்தியர்கள் தாக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதில் சில இந்தியர்கள் கொலை செய்யவும் பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அமைச்சர், 2021 இல் 29, 2022 இல் 57 மற்றும் 2023 இல் 86 வழக்குகளைக் காட்டும் புள்ளிவிவரங்களுடன், நாடு வாரியான தரவுகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.
2023 இல் தாக்கப்பட்ட அல்லது படுகொலை செய்யப்பட்ட 86 இந்தியர்களில், 12 பேர் அமெரிக்காவில் வசித்தனர், 10 பேர் கனடா, ஏனைய தாக்குதல்கள் ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் சவுதி அரேபியாவில் நடைபெற்றதாக அமைச்சரால் பகிரப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.