கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுவதால் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தண்ணீரில் இறங்க வேண்டாம் என்றும் நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிலிருந்து விநாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வெளியேற்ற பட்டு வருகிறது. மேலும் மணிமுக்தா நதியில் இருந்தும் வெள்ளாறு தொழுதூர் அணைக்கட்டு பகுதியில் இருந்தும், கூடுதல் மழை பொழிவின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணைக்கட்டு பகுதிக்கு நள்ளிரவில் 12000 கன அடி தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்க படுகிறது.
எனவே சேத்தியாத்தோப்பு அணையின் நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்க பட உள்ளது. என்பதை தெரிவித்து கொள்கிறோம். எனவே ஆற்றின் கரையில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளபடுகிறது. மேலும் வெள்ளாற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.