மதுரையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதன் எதிரொலியாக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மதுரை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் அண்ணா நகர், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
மேலும், அண்ணா தோப்பு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் முன் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.