சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு நாள் ஏறுவதும், ஒருநாள் இறங்குவதுமாக உள்ளது தங்கம் விலை. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய் கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் தங்கம் 7,285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.