திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்வில் பட்டாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது, நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் சுப்பிரமணிய சுவாமிக்கு சூட்டப்பட்டு கையில் செங்கோல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா என முழக்கம் எழுப்பி பக்தி பரவசத்துடன் முருகனை வழிபட்டனர்.