‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது உயிரிழப்பு ஏற்பட்ட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.
அந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் மற்றும் பலர் நடிப்பில், 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி கடந்த 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடைபெற்றது.
அப்போது, அல்லு அர்ஜூன் தனது குடும்பத்தாருடன் அந்த சிறப்புக் காட்சியை பார்த்து வருகின்றபோது, திரையரங்கில் கூட்டம் அலைமோதியது.