இலங்கை, மாலத்தீவு, நேபாளம் உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த புதிய தூதர்களிடமிருந்து அறிமுகச்சான்றுகளை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் டிசம்பர் 12ஆம் நாள் ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில்
சீனா, நீண்டகால வரலாறு மற்றும் பரந்தப்பட்ட நிலம் கொண்டுள்ளது. தூதர்கள் சீனாவின் பல பகுதிகளுக்கு சென்று, சீன மக்கள் சொல்வதைக் கேட்டறிந்து, சீனாவின் வரலாறு, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வார்கள்.
சீனாவின் இன்றைய நிலைமை பற்றியும் சீனாவின் வளர்ச்சிப் பாதை மற்றும் முன்னேற்றத்தின் திசை பற்றியும் புறநிலையாக அறிமுகப்படுத்த வேண்டுமென விருப்பம் தெரிவித்தார்.