திருவாசக முற்றோதலை 6 மணி நேரம் 32 நிமிடங்களில் பாடி பொள்ளாச்சியை சேர்ந்த நபர் உலக சாதனை படைத்தார்.
கடத்தூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி என்பவர் திருவாசக முற்றோதலை பாடி உலக சாதனை படைக்க முடிவு செய்தார். உடுமலை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
6 மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாமல் திருவாசக முற்றோதலை பாடியும், பிராணாயம் செய்தும் அய்யாசாமி உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வில் சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு திருவாசக முற்றோதலை கேட்டு ரசித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அய்யாசாமி, மாணிக்கவாசகர் கூறுவதை கேட்டு இறைவனே கைப்பட எழுதிய மெய்நூல் திருவாசகம் என தெரிவித்தார். பெருமை வாய்ந்த இந்த நூலை பாடி சாதனை படைப்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.