ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 5ஆவது தொடரில் இன்று விளையாடிய இந்திய அணி முதலில் டாசை வென்றுள்ளது. இதில் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா அணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனை ஏதோ பெரிய ரகசியம் போல் ஏன் இந்திய அணி மறைக்கிறது என்பது தெரியவில்லை. அணியிலிருந்து நீக்கப்பட்டதை மறைப்பதற்கு ரோகித் சர்மா ஒன்றும் பெரிய பேட்ஸ்மேன் இல்லை. விராட் கோலியை இவ்வாறு செய்திருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகும்.
ஆனால் ரோகித் சர்மா ஒன்றும் அவ்வளவு பெரிய பேட்ஸ்மேன் இல்லை. ரோகித் சர்மா 60 டெஸ்ட் தொடர் போட்டிகளில் வெறும் ஒரே ஒரு சதத்தை தான் இதுவரை அடித்துள்ளார். ரோகித் சர்மாவின் பேட்டிங் வெறும் 40 மட்டும்தான். இதனால் ரோஹித் சர்மா நீக்கப்பட்டதை மறைப்பதற்கு தேவை ஒன்றும் இல்லை என விமர்சித்துள்ளார்.