சில நேரங்களில் வானில் நடக்கும் நிகழ்வு நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் வெள்ளி, சனி, வியாழன் செவ்வாய் ஆகிய நான்கு கோள்களும் ஒரே தென்படும் அரிய வானியல் நிகழ்வு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் நிகழ உள்ளது.
அதிகாலை நேரத்தில் தொலைநோக்கி மூலம் அந்த கோள்களை பார்க்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் பூமிக்கு இணையாக ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு கிரக அணிவகுப்பு என அழைக்கப்படுகிறது.