“செவ்வியல் மேற்கோள்களில் புதிய சிந்தனைகள்” என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் தொடர் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிஜிடிஎன் ஊடகத்தின் பன்மொழி மேடையில் வழங்கப்படுவதுடன் பல நாடுகளின் முக்கியத் தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப்பாகிறது.
மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ள இந்நிகழ்ச்சியின் மூலம், சீன கலாசாரத்தின் அடித்தளம் மற்றும் சமூக நிர்வாக ஞானத்தை தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். புதிய சகாப்தத்தில் சீனாவின் ஆட்சிமுறையில் உள்ள சிந்தனை சார் சக்தி மற்றும் பாரம்பரிய விழுமியங்களும் முப்பரிமாணத்தில் ஆழமான சீனாவும் இதில் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஃபுஜியன் மாகாணத்தின் சான்மிங் நகரில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. சீனாவின் நவீன நிர்வாகத்தின் நடைமுறை நிகழ்வுகளை ஆய்வு செய்யும் விதம், களத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டது. பாரம்பரிய சீன செவ்வியல் அம்சங்களைச் சான்றுகளாகக் கொண்டு நிகழ்ச்சி தொகுக்கப்பட்டுள்ளது.