டஜன் கணக்கான பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறையால் 12ஆம் வகுப்பு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மிரட்டல்கள் அனைத்தும் புரளி என பின்னர் கண்டறியப்பட்டது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த மாணவர் டெல்லியில் உள்ள குறைந்தது 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு நிகழ்விலும், சந்தேகத்தைத் தவிர்க்கும் முயற்சியில், மாணவர் தனது பள்ளியைத் தவிர மற்ற பள்ளிகளுக்கு மின்னஞ்சல்களை CC-யில் இட்டு அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததில் இருந்து தொடர் அச்சுறுத்தல்கள் தொடங்கியது. டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 30 பள்ளிகளுக்கு இதுபோன்ற மின்னஞ்சல்கள் வந்தன.