தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
11-01-2025: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 12-01-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, தஞ்சாவூர். நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 13-01-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் சுன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 15-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல் செயற்கைக்கோளை அகற்றும் பரிசோதனையை இன்று நடத்தவுள்ளது. இந்த செயல்பாட்டில், முன்னர் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட இரண்டு [மேலும்…]
அமெரிக்காவில் நியூ ஜெர்சி உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்களில் பனிப்புயல் எச்சரிக்கை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் பற்றியெரிந்த காட்டுத் தீ ஓரளவு கட்டுக்குள் [மேலும்…]
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மற்றும் பொதுப்பொருள் பொறியியல் நுழைவு தேர்வுக்கான [மேலும்…]
தமிழ்நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 22 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. [மேலும்…]
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன துணை அரசுத் தலைவருமான ஹென்செங் ஜனவரி 19-ஆம் நாள் வாஷிங்டனில் அமெரிக்க துணை அரசு தலைவராகத் [மேலும்…]
சீனச் செயற்கை நுண்ணறிவு சங்கம் நடத்திய 2ஆவது செயற்கை நுண்ணிறிவு பயன்பாட்டுத் துறையின் சீன புத்தாக்க அறைகூவல் போட்டி ஷென்ச்சேன் நகரில் ஜனவரி 19ஆம் நாள் நிறைவடைந்தது. இப்போட்டியில் நாடு முழுவதும் [மேலும்…]