மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசே காரணம் என வெளியான செய்திக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் எந்த நிலப்பிரச்னையும் இல்லை. கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள ICF-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தொழிற்சாலையில் அதிக இரைச்சல் இருந்ததால் செய்தியாளரின் கேள்வி தெளிவாக கேட்கவில்லை. ‘தூத்துக்குடி’ குறித்து கேட்கப்பட்ட கேள்வியை ‘தனுஷ்கோடி’ என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன். தனுஷ்கோடி ரயில்பாதை திட்டத்தையே சுற்றுச்சூழல், நிலப்பிரச்னை காரணமாக கைவிடுமாறு தமிழ்நாடு அரசு கோரியிருந்தது.
இது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமே தவிர, மதுரை – தூத்துக்குடி திட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.