ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள புத்தல் கிராமத்தில் மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புத்தல் கிராமத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 45 நாட்களில் 12 குழந்தைகள் உட்பட இறப்பு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
முகமது யூசுப்பின் மனைவி ஜட்டி பேகம்(60) கடந்த வியாழக்கிழமை அன்று உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கணவர் கடந்த திங்கட்கிழமை அன்று அதே மர்மநோயால் உயிரிழந்துள்ளார். பின்னர் அதே கிராமத்தில் உள்ள அவரது உறவினர்களின் 3 குடும்பங்களில் 12 குழந்தைகள் உட்பட நேற்று வரை 16 பேர் அதே அறிகுறியுடன் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் சுகாதார அமைச்சர் சகினா இடூ மரணங்கள் எந்த வகையான வைரஸ் அல்லது தொற்று நோயால் ஏற்பட்டது என்று நிராகரித்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க 17 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.