அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மற்றும் பொதுப்பொருள் பொறியியல் நுழைவு தேர்வுக்கான தேதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 24ம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொருளியல் கல்லூரிகள், அறிவியல்/கலை கல்லூரிகள் அண்ணா பல்கலை வளாகம், அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், சுயநிதி நிறுவனங்கள் ஒப்படைத்த எம்பிஏ, எம் சி ஏ ஆகிய முதுநிலை பட்டம் படிப்புகளுக்கான பொது மாணவர் சேர்க்கையை (தமிழ்நாடு காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் டான்செட்) அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
அதேபோன்று மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலை வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம் இ, எம் டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிரத்தியோக நுழைவுத் தேர்வு அண்ணா பல்கலைத்தில் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான எம் பி ஏ மற்றும் எம்சிஏ முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதேபோன்று எம் இ, எம் டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பிரத்தியோக நுழைவு தேர்வு மார்ச் 20ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜனவரி 24ஆம் தேதி தொடரும். இதற்கு http://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.