மத்திய அரசு மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் விருது பெறுகிறார்கள். இந்நிலையில் திரை உலகைச் சேர்ந்த பல பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பிரபல நடிகை சோபனாவுக்கும் பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.