அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் மாதம் தோரும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இதற்கான கால அவகாசம் ஜனவரி 25ஆம் தேதி முடிவடைந்துவிட்டது. இந்த தேர்வு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது கால அவகாசத்தை ஜனவரி 29ம் தேதி வரை மத்திய அரசு நீடித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.