தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் 3 நாட்களுக்கு பக்தர்கள் இலவசமாக சாமி தரிசனம் செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச திருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை ஒட்டி 3 நாட்களுக்கு கட்டணம் இல்லாத தரிசனம் மேற்கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருவிழா தினம் மற்றும் அதற்கு முந்தைய நாள், திருவிழாவுக்கு அடுத்த நாள் என 3 நாட்கள் கட்டணமில்லா தரிசனம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.
திருவிழாவுக்கு வரும் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும், பக்தர்களின் வசதிக்காக நகரில் கட்டணமில்லா பேருந்து இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.