தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிகப் பணியிடங்களை தற்போது நிரந்தர பணியிடமாக மாற்றி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்பிறகு 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும்போது அது ஒழிவடையும் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து 145 பணியிடங்களுக்கு 2028 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10 வருடங்களுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என 47 ஆயிரம் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.