இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஆன GSLV-F15 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து NVS-02 என்ற 2250 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தங்களுடைய 100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து தற்போது வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் நேற்று இந்த ராக்கெட்டின் இறுதி கட்ட பணியான செவ்வாய்க்கிழமை அதிகாலை கவுண்டன் தொடங்கியது.
இந்த ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. மேலும் இதன் மூலம் விண்வெளி ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Tirupati, Andhra Pradesh: ISRO launchs its 100th mission, the NVS-02 navigation satellite aboard the launch vehicle GSLV-F15 from Sriharikota in Andhra Pradesh at 6.23 am today.
(Source: ISRO) pic.twitter.com/n5iY9N8N0p
— ANI (@ANI) January 29, 2025