தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. இவர் தமிழில் தியா, என் ஜி கே, மாரி 2, அமரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக சாய் பல்லவி வலம் வரும் நிலையில் தற்போது தெலுங்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து தண்டேல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இது உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் அந்த விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்து கொள்ளவில்லை.
அது பற்றி கேட்டபோது படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் நடிகை சாய் பல்லவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
அதாவது காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட காரணங்களால் நடிகை சாய் பல்லவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.