தமிழக காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமாரும், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு எஸ்.பி.யாக சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.