சென்சோ-17 வெற்றிகரமாக தரை இறங்கியது

சீனாவின் சென்சோ-17 மனித ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் திரும்பும் கலம் வெற்றிகரமாக ஏப்ரல் 30ஆம் நாள் மாலை 17:46 மணிக்கு தரை இறங்கியது. விண்வெளிவீரர்களின் உடல்நலம் சீராகவுள்ளது.

சென்சோ-17 விண்கலம் கடந்த அக்டோபர் 26ஆம் நாள் ஏவப்பட்டது. மூன்று விண்வெளிவீரர்கள் விண்வெளியில் 187 நாட்கள் தங்கி திட்டமிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

இக்காலத்தில் அவர்கள் இரண்டு முறை விண்வெளி நடைப்பயணம் மேற்கொண்டு, பல்வகை பணிக்கடமைகளையும் பரிசோதனைகளையும் மேற்கொண்டது சுட்டிக்காட்டத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author