Author: Puthiyathisaigal

திபெத்தில் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை பேணிக்காக்கும் பெளத்த துறவிகள்!

திபெத்தில் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை பேணிக்காக்கும் பெளத்த துறவிகள்!

சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் நிலைத்தன்மையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் நிலைநாட்ட சீனா அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. திபெத்தில் சீனா செய்துள்ள சாதனைகள் மற்றும் முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். திபெத்தில் மதச் சுதந்திரம் என்பதை அங்குள்ள அமைதியான சூழலும், வளர்ச்சி நிலைகளுமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது. பெளத்த மதத்தினர் தங்கள் மத வழிபாட்டு முறைகளை இயல்பாக அமைதியாக மேற்கொண்டு வருகின்றனர்.பெளத்த மதத்தின் பாரம்பரிய சின்னங்கள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தலாய் லாமாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போத்தாலா அரண்மனையில் அனைத்து தலாய் லாமாக்களின் ஆவணங்களும் பண்பாட்டுச் சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்படு வருகிறது. அரண்மனை அதன் வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண திட்டத்துடன் மிகவும் தனித்துவமானது, மற்றும்
8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என பரிந்துரை

8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என பரிந்துரை

தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என பரிந்துரை அளித்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரையில் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வேண்டாம் எனவும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. தொற்று குறைந்த மாவட்டங்களில்பெரிய வணிக நிறுவனங்கள் மால்கள் திறக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இறங்கிச் செல்வது ஏறுவதற்கே..!!

இறங்கிச் செல்வது ஏறுவதற்கே..!!

கலைச்சோலை
உயரம் எனை ஈர்த்தது..சிகரத்தில் ஒன்றுமில்லை..உச்சியில் நான் மட்டுமேஎன்பதை அறிவேன்..எனக்கும் வானத்திற்குமானஇடைவெளி குறைந்திருக்கும்… ஏறுவது மிகக் கடினமென்றாலும்..விடாமுயற்சி இலக்கை நோக்கிபயணிக்க வைக்கும்..காலம் அடி பணியும்..உறவுகள் விலகும்..உலகம் பைத்தியக்காரன் என்பர்.. இதயத்தில் வலியுடன்..பாதங்களில் குருதியுடன்கைகள் மரத்து..உணர்வுகளை குவித்து..சக்திகளை திரட்டி..தவழ்ந்து.. மெல்லஇதோ இலக்கைஅடைந்து விட்டேன்.. திரும்பிச் செல்வதா..கீழே குதிப்பதா..வெற்றியை கொண்டாடுவதா..இளக்காரம் செய்தவர்கள்கீழே தென்படுகிறார்களா..உணர்ச்சிப் பொங்கவிண்ணைப் பிளக்க கத்துவதா..கர்வம் கொள்வதா..ஆணவத்தில் கொக்கரிப்பதா..முயற்சியை கைவிட்டவர்களைபார்த்து பரிதாபப் படுவதா யென நிமிர்ந்து நோக்குகையில்எனது பார்வைக்குநேர் மேலே..மற்றுமொரு சிகரம்புலப்படுகிறது.. நானொன்றும் அனுமன் இல்லையே..எளிதாக மலையைத் தாண்டிவிட.. மே

சிமெண்ட், கம்பி மற்றும் கட்டுமானப் பொருட்கள்
விலை ஏற்றத்தைத் தடுத்து நிறுத்துக!

வைகோ வலியுறுத்தல் கொரோனா பேரிடர் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது முடக்கம் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடர முடியாத நிலையில், இலட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுமானப் பணிகளை தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகும். கொரோனா பெருந்தொற்று, தமிழ்நாட்டு அரசின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, நடுத்தர எளிய மக்களின் பொருளாதாரத்தையும் சூறையாடி இருக்கிறது. இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் அதிர்ச்சி தருகிறது. சில்லரை விற்பனையில் 410 ரூபாய் முதல் 430 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது ரூ.470 - 520 ஆக அதிகரித்துள்ளது. இரும்புக் கம்பி ஒரு கிலோ ரூ. 60 லிருந்து ரூ. 70
மருத்துவப் படிப்புகளில் 2.5% உள் ஒதுக்கீடு வழங்க ஆலோசனை!

மருத்துவப் படிப்புகளில் 2.5% உள் ஒதுக்கீடு வழங்க ஆலோசனை!

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்
அலைகடல் அற்புதம்

அலைகடல் அற்புதம்

கலைச்சோலை
படைத்தவன் படுப்பது பாற்கடல் என்பார்!கடலில் மூழ்கி உலகைக் காத்தார்!வராகக் கடவுள் என்றே சொல்வார்!வாசுகி மத்தால் கடலைக் கடைந்தபொருளின் முதலே அமிர்தம் என்பார்!சமுத்திர நீரை அரசன் ஆக்கிஅற்புத புராணம் அழகாய் சொல்வார்!புராணப் பெருமை ஆயிரம் உண்டுகடலைப் போற்றிப் புனைந்த வரிகள்! கடலும் வானும் சேரும் இடமேகவிஞர் கொள்ளும் அதிசய உவமை!கடலைப் போல உயர்வைச் சொல்லும்காவியம் எல்லாம் தமிழில் அதிகம்!கடலைப் போல பெரிய மனதுஎன்றே சொல்வார் நாமும் ஏற்போம்! காவியக் கண்ணன் ஒன்றாய் இருந்துகணக்கில் அடங்கா கோபியர் கூட்டம்காதல் நதியாய் கலந்திடச் செய்தான்!கடலாய் எங்கும் காட்சி அளித்தான்!உலகில் உள்ள நதிகள் எல்லாம்முடிவில் சேரும் இடமும் ஒன்றே!நதிகள் எல்லாம் கோபியர் என்றால்கடலின் காட்சி கண்ணன் தானே! கண்டம் காட்டும் எல்லை எல்லாம்கடலை வைத்தே முடிவும் செய்வார்!நீலக் கடலில் நீந்தும் பொருட்கள்!அற்புத உலகம் அனைத்தும் உண்டு
விறகுகளாய் எரியும் வீணைகள்

விறகுகளாய் எரியும் வீணைகள்

• ஆசிரியர்: முனைவர் திரு. சுந்தரமுருகன் அவர்கள், சாகித்திய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர், புதுச்சேரி அரசு – சட்டத்துறை மொழி பெயர்ப்பாளர், புதுச்சேரி, தலைவர் - அபயம் தொண்டு நிறுவனம், புதுச்சேரி, பொதுச்செயலாளர் மற்றும் சிறப்பாசிரியர் - நண்பர்கள் தோட்டம் – இலக்கியத் திங்களிதழ், புதுச்சேரி. • பக்கங்கள்: 140• விலை: ரூ 140/-• வெளியீடு: நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி. நெருப்புக் குழம்புகள் இறுகி கருத்த கண்ணகியாக மாறிய கவிஞராக உருவெடுக்கிறார் ஆசிரியர் முனைவர் திரு. சுந்தரமுருகன் அவர்கள். திருந்துங்களேன் மனித விலங்குகளே…! என ஆதங்கப்படுகிறார். மத(து), இன, சாதி வெறி, உலகெங்கும் தேவையான உண(ர்)வும், உழைப்பும், உழ(யர்)வும், இயற்கையின் தேவையும், இவற்றை தள்ளிவிட்டு நாம் காட்டும் அலட்சியம், மலர விடாத மனித நேயம் என நம் பல(வீனக்) கவனக்குறைவினை அறியச் செய்கிறார். இந்தியத் திருநாட்டில் சரித்திரங்
மேட்டூர் அணையில் ஆயத்த பணிகள் தீவிரம்

மேட்டூர் அணையில் ஆயத்த பணிகள் தீவிரம்

மு.க.ஸ்டாலின் 12-ந் தேதி திறந்து வைக்கிறார் மேட்டூர் அணையில் ஆயத்த பணிகள் தீவிரம் கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார் மேட்டூர்:மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். அதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டார்.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்து நேரில் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். இதனால் அணையை திறப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் அணையை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அணையின் நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், டெல்டா பாசனத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்
புதுச்சேரியில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்: குடிமக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்: குடிமக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பார்கள், அமர்ந்து மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. புதுச்சேரியில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த இந்த பொதுமுடக்கம் தற்போது ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கார், ஆட்டோ உள்ளிட்
சாதனையின் இரகசியம்..

சாதனையின் இரகசியம்..

கலைச்சோலை
இந்த அனுபவம்கிடைத்து விடுவதில்லைஎவருக்கும் எளிதில்..அதற்கும் வேண்டும்தனித் திறமை.. இன்பமும்… துன்பமும்பாராட்டுகளும்.. புறக்கணிப்பும்..அங்கீகாரமும்.. அவமானமும்..வாய்ப்புகளும்..வசைகளும்..பெருமிதமும்.. பொறாமையும்..நண்பனும்.. எதிரியும்..கைதட்டல்களும்.. ஏமாற்றமும்.. அனைத்தும் ஒரேநேரத்தில் மாற்றி..மாற்றிவிழிகளில் திரையிடும்.. .கன்னத்தில் வழிந்துநீர் இரண்டாக பிரியும்..ஒன்று ஆனந்தக்கண்ணீர்..மற்றொன்று.. பிறர் இதயத்தில்ஊற்றிய சுடுநீர்.. இரண்டையும் சமமாகபாவித்து..துடைத்தெறிந்து விட்டுபுறப்பட்ட தன்னம்பிக்கையேசோதனையை சாதனையாக்குகிறது.. எல்லா தோல்விகளிலும்..முயற்சி அடங்கியிருக்கும்..எல்லா வெற்றிகளிலும்முந்தைய தோல்வி ஒளிந்திருக்கும்.. சாரதா சந்தோஷ்ஐதராபாத்9640596371