இந்தியா

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொள்ளவோம்

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொள்ளவோம்

மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை துணிவுடன் எதிர்கொள்வோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அச்சமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர், மரணத்தை கூட பயமில்லாமல் எதிர்கொண்டனர் அவர்கள் இருவரும் அச்சமில்லாமல் வாழ்வதும் வேலை செய்வதும் எந்த அளவுக்கு முக்கியம் என்று எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளனர். எனவே மோடி அரசு எப்படியெல்லாம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அதனை துணிவுடன் அப்படியே எதிர்கொள்ளவோம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்; மோடி

கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும்; மோடி

கரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றும், கரோனாவுக்கு எதிராக வலுவான போரை இந்தியா நடத்துகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெறும் மூன்று நாள் இணைய வழி குளோபல் வீக் மாநாட்டில் 5000 பேர் பங்கேற்று உள்ளனர். 30 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரையற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- உலகளவில் பொருளாதார மீட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.திறமையாளர்களின் மையமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டு வளர்கிறது. இந்தியா கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இந்தியா கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை மேற்கொண்டு வருகிறது. உலகமே இந்தியாவின் திறமையை அங்கீகரித்துள்ளது.இந்தியாவில் பல்வ
கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதல் இடமும், தமிழகம், டெல்லி, குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 522 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 2,252 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறியுள்ளார்.
லடாக்கில் மோடி: ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தி அசத்தினார்

லடாக்கில் மோடி: ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தி அசத்தினார்

சீனா, இந்தியா ராணுவ மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவும் லடாக்கின் லே பகுதிக்கு இன்று காலை பிரதமர் மோடி யாரும் எதிர்பாராத வகையில்திடீர் பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் முப்படைகளின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி விபின் ராவத், ராணுவ அதிகாரிகள் உடன் சென்றனர். கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லே பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுடன் உரையாடி அவர்களை உற்சாக மூட்டினார். அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேட்டறிந்தார்.
மன்கிபாத்; பிரதமர் இன்று வானொலியில் உரை

மன்கிபாத்; பிரதமர் இன்று வானொலியில் உரை

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லை விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியதா?

காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியதா?

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு திருப்பி விடப்பட்டதாக பா.ஜ., தலைவர் நட்டா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., தலைவர் நட்டா, காங்கிரசின் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பா.ஜ., தலைவர் நட்டா டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது: பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுவதும் பேரடர்களை சந்திக்கும் மக்களுக்கானது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இதிலிருந்து ராஜிவ் அறக்கட்டளை(ஆர்ஜிஎப்)க்கு நன்கொடை வழங்கப்பட்டது பிரதமர் நிவாரண நிதி வாரியத்தில் தலைவராக இருந்தது யார்? சோனியா ராஜிவ் அறக்கட்டளையின் தலைமை பதவியில் இருந்தது யார்? சோனியா தான். எந்தவித அறிவுணர்வும் இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் இதன் நடைமுறைக
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது, கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், டிஜிசிஏ அனுமதி வழங்கியுள்ள சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும் என விமான போக்குவரத்து இயக்குநர் ஜெனரல்(டிஜிசிஏ) அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பதஞ்சலி மருந்து ஹரித்துவாரில் அறிமுகம்..!

கொரோனா பதஞ்சலி மருந்து ஹரித்துவாரில் அறிமுகம்..!

பதஞ்சலி ஆயுர்வேதிக் மெடிசன்ஸ் நிறுவனம் தயாரித்த Anti - Covid "Divya Coronil Tablet - என்ற கொரோனா தடுப்பு மாத்திரை தடையை மீறி, ஹரித்துவாரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாத்திரை ஏழு நாட்களில் கொரானாவிலிருந்து 100 சதவீதம் முழுமையாக மீண்டு விட உதவுகிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட பதஞ்சலியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் Clinical Trials Registry- India (CTRI) அங்கீகாரம் பெற்ற கொரானாவுக்கான முழு முதல் ஆயூர்வேத மருந்து இதுவே.. இது kit வகையில் அறிமுகமாகி உள்ளது ( 2+1). இதன் விலை 545/- மட்டுமே. இந்தியா முழுவதும் பதஞ்சலிகடைகளில் இன்னும் ஒரு வாரத்தில் இது கிடைக்கப் பெறும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளைய சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியத் தொடங்கியது.!

வளைய சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியத் தொடங்கியது.!

வானில் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் இன்று காலை 10:22 மணியளவில் தொடங்கியது. பூமி தன் சுற்றுப்பாதையில் சூரியனையும், நிலவு தன் சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வருகின்றன. இந்நிகழ்வில் சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால், அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அமாவாசையான இன்று நிலவு, சூரியனை மத்தியில் மறைப்பதால், சூரியன் வளையம் போன்று தோன்றுகிறது. இது 'வளைய சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகிறது. இது காலை 10:22 மணிக்கு தொடங்கி இந்தியாவில் சில இடங்களில் தெரியத் தொடங்கியுள்ளது.
யோகாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்: நரேந்திர மோடி

யோகாவோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்: நரேந்திர மோடி

கொரோனா பரவல் உள்ள நிலையில் யோகாவை கற்றுக்கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.யோகாவின் பலன்களை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு நமது நாடும், உலகமும் உணர்ந்துள்ளது. எனவே உங்களது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக யோகாவை செய்து பழகுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினம். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: அனைவருக்கும் 6ஆவது சர்வதேச யோகா தின வாழ்த்துகள். யோகா நிறம், மதம், இனம் உள்ளிட்ட பாகுபாடுகளை பார்க்காது; மனிதநேயத்தை பலப்படுத்தும். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றுவதற்காக நாளாக இது திகழ்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்று சுவாச மண்டலத்தைத் தாக்குகிறது. 'பிரணாயம்', என்னும் ஒருவகை சுவாசப் பயிற்சி நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்க மிகவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால்