சினிமா

தில் பேச்சாரா பாடல்கள் இன்று வெளியிடு

தில் பேச்சாரா பாடல்கள் இன்று வெளியிடு

சுசாந்த் சிங் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த தில் பேச்சாரா பாடல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான். தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு கே.பி; ரஜினி புகழாரம்!

ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு கே.பி; ரஜினி புகழாரம்!

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து செய்தியை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- இன்று என் குருவான கே.பி அவர்களின் 90-வது பிறந்தநாள். கே பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன். ஆனால், இன்று நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் அவர்கள் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார். என் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி இருக்கிறார். எனக்கு மட்டுமல்ல இன்னும் எத்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார்

நெருக்கடி சூழ்நிலையில் வனிக ரீதியாக பெருமளவில் நஷ்டங்களை சந்தித்துவரும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் முயற்சியாக,பல நடிகர் நடிகைகள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்து ஒப்புதல் அளித்துள்ல நிலையில், தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சம்பளத்தினை 50 சதவீதமாகக் குறைத்துக்கொண்டுள்ளார். அது கிட்டதட்ட ரூ. 75 லட்சம் எனக் கூறப்படுகிறது. ரகுல் தற்போது சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன்-2' மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கிவரும் அவர் தனது உடற்பயிற்சி, யோகா, தம்பியுடனான விளையாட்டு, சமூகவலைதள சவால்கள் என வழக்கமாக வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு, ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்கிறார்.
ஏ.ஆர் முருகதாஸின் திரைத்துறை வாழ்க்கை

ஏ.ஆர் முருகதாஸின் திரைத்துறை வாழ்க்கை

தமிழ் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த ஏ.ஆர் முருகதாஸ் தனது முதல் பட வேலைகளை தொடங்கி பல்வேறு தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் சந்தித்து வந்துள்ளார். ரட்சகன், குஷி போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி கொண்டிருந்த ஏ.ஆர்.முருகதாஸ் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானது தீனா என்ற படத்தில்தான். அஜித், லைலா, சுரேஷ் கோபி என பலரும் நடித்துள்ள இந்த படம் ஏ. ஆர் முருகதாஸுக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் பல நாட்கள் வெற்றிகரமாக தொடர்ந்து ஓடியது. சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் மனோபாலா தொகுத்து வழங்கிய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு தனது முதல் படமான தீனா பட வாய்ப்பை பற்றிய சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதில் தான் உதவி இயக்குநராக இருந்தபோது முதல் படத்தை இயக்க வாய்ப்பு தேடி கொண்டிருந்ததாகவும் அதற்காக பல நடிகர்களையும் பல தயாரிப்
வனிதா திருமணம் எளிமையாக நடந்தது

வனிதா திருமணம் எளிமையாக நடந்தது

வனிதா மற்றும் பீட்டரின் திருமணம் அவருடைய இல்லத்தில் எளிமையாக நடந்து முடிந்தது. பிரபலங்கள் பலரும் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக திருமணத்திற்கு அவர் தயாரான அந்த காணொளியை அவர் தனது youtube தளத்தில் லைவ்வாக வெளியிட்டதும். அந்த காணொலி ஒரே நாளின் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பிரபு சங்கரின்.. சரித்திரத் திரைப்படம்..

இயக்குனர் பிரபு சங்கரின்.. சரித்திரத் திரைப்படம்..

இராசேந்திர சோழன்.. ஒரு முன்னோட்டம்.. பாகுபலி ஒரு கற்பனைக் கதை..ஆனால் அந்த கற்பனையையே மிஞ்சிவிடும் சாகசங்களை செய்த ஒருவன் நமது சரித்திரத்தில் வாழ்ந்தான்.. ஆயிரம் வருடங்களுக்கு முன் இரத்தமும் சதையுமாக நடமாடினான்.. போர் அவனது வாழ்க்கை முறை.வாள் அவனது முதல் மனைவி,வில் அவனுக்கு இரண்டாவது மனைவி.தன் வாழ்நாளின் இருபது வருடங்களை கடற்போரிலேயே கழித்தவன்.எதிர்த்து நின்றவர்களை தூசி கூட மிச்சம் இல்லாமல் தூர்வாரித் தள்ளியவன். 60,000 யானைகள் கொண்ட யானைப் படைகளையும்,25000 குதிரை படை..9,00,000வீரர்களையும் கொண்ட ஒரு யுத்த சேனையை வங்கக் கடலை கிழித்து கடந்து கொண்டு போய் மறு கரையிலே நிறுத்திய அடுத்த நொடி,மறு பேச்சில்லாமல் வீழ்ந்த நாடுகள் ஏராளம். மலேசியா,தாய்லாந்து,சிங்கப்பூர்,இந்தோனேசியா,ஜாவா,சுமத்திரா,இலங்கை என கிழக்கு ஆசியா மொத்தம் 46 நாடுகள் முழுவதும் வென்று அங்கே புலிக்கொடியைப் பறக்க
ரஜினி தான் இன்றும் நம்பர் 1

ரஜினி தான் இன்றும் நம்பர் 1

தமிழ்த் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான் ஆனால் அவர் என்ன சம்பளம் வாங்குகிறார் தெரியுமா? விஜய், அஜித் போன்றவர்களே அதிகமான சம்பளம் கேட்கும் போது ரஜினிகாந்த் அதிக சம்பளம் கேட்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. 'கபாலி' படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற சம்பளம் 40 கோடி என்கிறார்கள். மேலும் தற்போது அண்ணாத்த படத்திற்காக ரஜினிக்கு ரூ 105 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இவை படத்தின் பட்ஜெட்டில் பாதியாம், இதை வைத்து பார்க்கையில் ரஜினி தான் இன்றும் நம்பர் 1 என தெரிகிறது.
‘ஜகமே தந்திரம்’ வெளியான பிறகு தனுஷ் இயக்கத்தில் ரஜினி

‘ஜகமே தந்திரம்’ வெளியான பிறகு தனுஷ் இயக்கத்தில் ரஜினி

‘ஜகமே தந்திரம்' வெளியான பிறகு, தனுஷ் தனது ‘நான் ருத்ரன்' திரைப்படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கேங்க்ஸ்டர் திரைப்படமான ‘ஜகமே தந்திரம்' வெளியீட்டுக்காக காத்திருக்கும் தனுஷ், சமீபத்தில் ஒரு ஆன்லைன் போர்டலுக்கு அளித்த பேட்டியில், ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தை இயக்குவது குறித்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அசுர குரு விரைவில் ஓடிடி தளத்தில்

அசுர குரு விரைவில் ஓடிடி தளத்தில்

ராஜதீப் இயக்க விக்ரம் பிரபு நடிப்பில் அசுர குரு என்ற படம் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆக்ஷன் கிரைம் கலந்த த்ரில்லர் படமாக உருவான இந்த படத்தை ஜே.எஸ்.பி. என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க மஹிமா நம்பியார், யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொரோனா காரணமாக சில நாட்கள் மட்டுமே திரையாகில் ஓடிய நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை பிரபல பி.ஆர்.ஓ டைமோண்ட் பாபு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்..

வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்..

இந்த உலகம் எதற்காகவோ ஏங்கிக்கொண்டேயிருக்கிறது. எதையோ தேடி தேடி கிடைக்காதுபோகையில் இதுதான் முடிவென கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் ஒரு சிறுபிள்ளையினைப் போல ஏந்திக்கொண்டு மீண்டும் மீண்டும் வெறும் ரணத்தோடும் தோல்விகளோடும் எங்கோ தான் வென்றிருக்கும் தடத்தின் வழியேகூட பயணிக்க இயலாது மீண்டும் குறுக்கே புகுந்து வேறு புறம் வளைந்து தனக்கான எதையோ ஒன்றை எப்பொழுதிற்குமாய் தேடிக்கொண்டே இருக்கிறது இவ்வுலகம். இங்கே உலகமென்பது யார், நாம் தான் உலகமாக உருவெடுக்கிறோமா? நாம்தான் இவ்வுலகை செதுக்கவோ அறுக்கவோ செய்கிறோமா? அல்லது இவ்வுலகு இப்படி ஆகிவிட்டமையால்தான் அதன்பின்னே நாமும் அதுவாகப் பயணிக்கிறோமா? எதுவாயினும் எங்கோ யாராலோ முழுதாய் பிறழ்ன்றிருக்கிறது இவ்வுலகு. அந்தப் பிறழ்வுதனை நேர்த்தியாக்க முயன்றும் அல்லது அடையாளம் கண்டும் தமக்கான சமகாலத்தில் இது இது இப்படியிப்படி நேர்ந்ததென வ