முக்கியச் செய்தி

உச்ச நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் என்ன?

உச்ச நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் என்ன?

நடிகர்களின் மார்கெட் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டின் அடிப்படையில்தான் அவர்களுடைய சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. கோலிவுட்டைப் பொருத்தவரையில் பின்வரும் சம்பளத்தை இந்த உச்ச நட்சத்திரங்கள் வாங்குகிறார்கள் என்று தகவல் அவ்வப்போது வெளிவரும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - 70 கோடி தளபதி - விஜய் 50 கோடி 'தல' அஜித் - 45 கோடி உலக நாயகன் கமல்ஹாசன் - 35 கோடி சூர்யா - 25 கோடி சீயான் விக்ரம் - 18 கோடி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - 9 கோடி தனுஷ் 9 கோடி சிம்பு 9 கோடி சிவகார்த்திகேயன் 5 கோடி நடிகைகளைப் பொருத்தவரையில் அவர்கள் கதாநாயகனுக்கு பக்க துணையாக மட்டும் வந்து போகும் நிலையில் அவரவர் screen presence-க்கு ஏற்ற வகையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
கவர்ச்சி உடையில் மலையேறும் அமலாபால்

கவர்ச்சி உடையில் மலையேறும் அமலாபால்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் விஜய்யுடனான விவாகரத்துக்கு பிறகு நடிகை அமலாபால் சினிமா துறையில் பிசியான நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஆடை படத்தில் ஆடையில்லாமல் தைரியமாக நடித்து அசத்தினார். அடுத்து அமலா பால் கையில் 5க்கு மேற்பட்ட படங்கள் உள்ளன. பெரும்பாலும் முதன்மை கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் உள்ள சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
ஒபிஎஸ் ஏன் விமான நிலையம் வரவில்லை – அதிமுகவினர் மத்தியில் குழப்பம்!

ஒபிஎஸ் ஏன் விமான நிலையம் வரவில்லை – அதிமுகவினர் மத்தியில் குழப்பம்!

அதிமுக தொண்டர்கள் மத்தியில் அம்மா கைகாட்டியவர் என்ற அடையாளம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு உண்டு. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் என்றும், ஆட்சியில் துணை முதல்வராகவும் தொடர்ந்து வருகிறார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனிப் பெரும் தலைவராக உருவெடுத்து நிற்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த பத்து தினங்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்கவில்லை. இது பரபரப்பாக பேசப்பட்டது. *ஓ.பி.எஸ். புறக்கணிப்பு?!* இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்
இந்தியா-நேபாளம் இடையே  ராட்சத பெட்ரோல் குழாய் திறப்பு

இந்தியா-நேபாளம் இடையே ராட்சத பெட்ரோல் குழாய் திறப்பு

டெல்லி: இந்தியா-நேபாளம் இடையே அமைக்கப்பட்டுள்ள ராட்சத பெட்ரோல் குழாயை பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியும் இணைந்து திறந்துவைத்தனர். பீகார் மாநிலம் மோத்திஹரியில் இருந்து நேபாள நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அம்லேகான்ஜி வரை, பெட்ரோலை கடத்தி செல்லும் ராட்சத குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு இந்தியா ரூ.350 கோடி செலவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த பெட்ரோல் குழாயின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஆகியோர் பெட்ரோல் குழாயை இணைந்து திறந்துவைத்தனர். இதையடுத்து நிகழ்ச்சியல் பேசிய பிரதமர் மோடி, " தென் கிழக்காசியாவில் இருநாடுகளுக்கும் இடையே அமைக்கப்பட்ட முதல் ராட்சத பெட்ரோல் குழாய் இதுவென்பது மிகவும் மனநிறைவாக உள்ளது. திட்டமிட்டதைவிட இந்த திட்டம் வேகமாக நிறைவடைந்துள்ளது. இதற்கு நேபாள அரசு, எங்களத
சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபை நாடுகளுக்கு அரசு முறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 13 நாள்கள் சுற்றுப்பயணத்தை முதல்வர் பழனிசாமி மேற்கொண்டார். முதல்வரின் இந்த பயணத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு முறை பயணம் முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பிய முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்கான அரசு முறை பயணம் வெற்றியடைந்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதிய உயர்வு ரத்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதிய உயர்வு ரத்து

விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் உட்பட இஸ்ரோவின் ஆயிரக்கணக்கான மூத்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஊதிய உயர்வை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, விண்வெளி பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தோஷ் குமாரிடம் கேட்டபோது, இது உள்விவகாரம் என்று கூறி இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும், விண்வெளி பொறியாளர்கள் சங்கம், மத்திய அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்துமாறு இஸ்ரோ தலைவர் கே. சிவனை நாடியுள்ளனர். இதுகுறித்து விண்வெளி பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிமாறன் தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், "செயல்பாடுகளின் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்கும் திட்டமும், கூடுதல் ஊதிய உயர்வும் முற்றிலும் வெவ்வேறானது. எனவே, கூடுதல் ஊதிய உயர்வுக்கு மாற்றாக அத்திட்டம் இருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். சந்திரயான் -2 விண்கலம் ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்
மோடியை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை  உயர்வு

மோடியை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை உயர்வு

பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியுள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சாராக இருந்த போது மோடி ட்விட்டர் கணக்கு தொடங்கினார். அப்போதிலிருந்தே தனது மாநில மக்களுடன் ட்விட்டரில் தொடர்பில் இருந்த அவரை, 2014ஆம் ஆண்டு பிரதமர் ஆன பின்னர் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை 6 கோடியே 40 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ட்விட்டர் கணக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஒபமாவின் ட்விட்டரை 10 கோடியே 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்கு எல்லை மற்றும் இந்தியாவுக்கு இடையே 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்குவா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உணரப்பட்டு உள்ளது. இதேபோன்று அபோதாபாத், நாகியால் மற்றும் மன்ஷெரா உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். எனினும், காயமடைந்தோர் அல்லது பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரவில்லை. கடந்த மே மாதத்தில், சித்ரால் மற்றும் கைபர் பக்துன்குவா பகுதியை சுற்றியுள்ள இடங்களில் 4.2 அளவிலான நிலநடுக்கமும், கடந்த
விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிய வந்தது: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிய வந்தது: இஸ்ரோ

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய சந்திரயான்-2 விக்ரம் லேண்டர், தற்போது இருக்குமிடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் பரப்பில் லேண்டர் இருக்குமிடத்தை, நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் படம் பிடித்தது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சற்று ஆறுதலை இப்போது அளித்திருக்கிறது. இதையடுத்து அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். லேண்டர் விக்ரம் இருக்கும் இடம் தொடர்பான புகைப் படங்களை இஸ்ரோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
திரைவானில் மீண்டும் ஒரு அக்னி நட்சத்திரம்

திரைவானில் மீண்டும் ஒரு அக்னி நட்சத்திரம்

பல வெற்றிப் படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்றியவர் சரண். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் நாயகனாக விதார்த் நடிக்கிறார்.மேலும், இயக்குநர் விஜய்யின் சகோதரர் உதயாவும், இந்த படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நாயகியாக தடம் பட நாயகி ஸ்மிருதி வெங்கட் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.