முக்கியச் செய்தி

விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிய வந்தது: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் இருக்குமிடம் தெரிய வந்தது: இஸ்ரோ

நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய சந்திரயான்-2 விக்ரம் லேண்டர், தற்போது இருக்குமிடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவின் பரப்பில் லேண்டர் இருக்குமிடத்தை, நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் படம் பிடித்தது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சற்று ஆறுதலை இப்போது அளித்திருக்கிறது. இதையடுத்து அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். லேண்டர் விக்ரம் இருக்கும் இடம் தொடர்பான புகைப் படங்களை இஸ்ரோ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது
திரைவானில் மீண்டும் ஒரு அக்னி நட்சத்திரம்

திரைவானில் மீண்டும் ஒரு அக்னி நட்சத்திரம்

பல வெற்றிப் படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்றியவர் சரண். இவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் அக்னி நட்சத்திரம். இந்த படத்தில் நாயகனாக விதார்த் நடிக்கிறார்.மேலும், இயக்குநர் விஜய்யின் சகோதரர் உதயாவும், இந்த படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நாயகியாக தடம் பட நாயகி ஸ்மிருதி வெங்கட் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது: மோடி

இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது: மோடி

சந்திரயான் 2க்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 'தாய்நாட்டிற்காக உழைப்பவர்கள் விஞ்ஞானிகள் பி பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்தேன். தாய் நாட்டின் கனவுகளை நினைவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளீர்கள். நமது விண்வெளி திட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. கடைசி நிமிட பின்னடைவு நிரந்தரமல்ல. நிச்சயமாக நிலவை தொடும் முயற்சி வெற்றியடையும். எதிர்காலத்தில் நாம் மேலும் முயற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது.' எனப் பேசினார். மோடியின் ஊக்க உரையைக் கேட்டு அங்கிருந்த பெண் விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சிப்பெருக்கால்கண்ணீர் விட்டனர்.
தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை

தெலங்கானா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்க உள்ளார். அந்த மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையுடன் பொறுப்பேற்கவுள்ள விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, ஆளுநராக நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் உத்தரவுக் கடிதத்தை தெலங்கானா பவன் அதிகாரி வேதாந்தகிரி தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார்அப்போது, பதவியேற்பு நிகழ்வுக்கான தேதி, நேரம் ஆகியன முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இன்று பதவியேற்பு: தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொள
அசாமில் நில அதிர்வு

அசாமில் நில அதிர்வு

அசாம்: கார்பி ஆங்லாங் பகுதியில் நில அதிர்வு - ரிக்டர் அளவில் 3.3ஆக பதிவு:* இமாச்சல பிரதேசம் சம்பாவில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் அசாமிலும் நில அதிர்வு பதிவாகி உள்ளது.*
சிறப்பு அந்தஸ்த்து ரத்துக்கு மக்கள் வரவேற்பு

சிறப்பு அந்தஸ்த்து ரத்துக்கு மக்கள் வரவேற்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு, அந்த மாநில மக்களில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறினார். இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருக்கும் தடையுத்தரவுகள் படிப்படியாக பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. காஷ்மீர், ஜம்மு, லடாக் பகுதிகளில் மொத்தம் உள்ள 199 காவல்துறை மாவட்டங்களில், 10-இல் மட்டுமே தடையுத்தரவு அமலில் இருக்கிறது. இந்த 3 இடங்களிலுமே தரைவழி தொலைபேசி சேவைகள் முழுமையாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. செல்லிடப்பேசி மற்றும் இணையதளச் சேவைகளை பயங்கரவாதிகள் நாசவேலைக்கு பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றை தடை செய்வதால் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடாது. காஷ
சிறையில் பாடாய் படும் சிதம்பர ரகசியம்

சிறையில் பாடாய் படும் சிதம்பர ரகசியம்

சோனியா, ராகுல், பிரியங்கா போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேரும் முன்பே, அந்த கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் ப.சிதம்பரம். டெல்லியில் தனக்கு என்று ஒரு லாபியை உருவாக்கி கொண்டு, அங்கேயே செட்டில் ஆனவர். தொண்டர்கள் இல்லாவிட்டாலும், மேலிட செல்வாக்கால் இவரை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியவர் சிதம்பரம். 'ரீக்கவுண்டிங் மினிஸ்டர்' என்ற சிறப்பு பெயர் பெற்றதன் மூலம், காங்கிரஸ் கட்சி சிதம்பரத்தை எவ்வளவு நம்பி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்லாமல், நாட்டின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றிலும் சிதம்பரத்தின் தாக்கம் அதிகம். இவை எல்லாவற்றையும் விட கடந்த சில நாட்களாக ஐ.என்.எக்ஸ்.,மீடியா முறைகேடு வழக்கில் நடத்த பல விஷயங்கள் தான், பிறந்தாலும் சிதம்பரமாக பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தை, ஆசையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பல ஆண்
ராம்ஜெத் மலானி காலமானார்

ராம்ஜெத் மலானி காலமானார்

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. பாகிஸ்தானில் பிறந்த இவர் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார். 17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். அப்போது தொடங்கிய இவரின் வழக்கறிஞர் பயணம் 2017 வரை நீடித்தது. ராம் ஜெத்மலானி மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
நோ பிரா இயக்கம் தொடக்கம்

நோ பிரா இயக்கம் தொடக்கம்

தென்கொரியாவில் பெண்களின் தனிப்பட்ட சுதந்திரம் என்ற கருத்தில் நோ பிரா இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும், அவர், ''தன் மீது கவனத்தை ஈர்க்க'' முயற்சிக்கிறார் என்றும், வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செயலில் ஈடுபடுகிறார் என்றும் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், ''பிரா அணிவது உங்களுடைய விருப்பம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிந்து மார்பகங்களை வெளிக்காட்டும் வகையில் அவர் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அதுபோல அவர் செய்யத் தேவையில்லை,'' என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ''பிரா அணியாததற்காக உங்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. உங்கள் மார்புக் காம்புகளை மறைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,'' என்கிறது இன்னொரு பதிவு.
சந்திராயன் 2 சிறப்புத் தகவல்

சந்திராயன் 2 சிறப்புத் தகவல்

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-2 விண்கலம் இஸ்ரோவால் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. சந்திராயன் 2 விண்கலத்தில் இருக்கும் ஆர்பிட்டலில் இருந்து விக்ரம் என பெயரிடபட்ட லேண்டர் பகுதி மட்டும் பிரிந்து இன்று அதிகாலை 1.30 மணியாளவில் நிலவில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேர சில சறுக்கல்கள் காரணமாக லேண்டரில் இருந்து சிக்னல் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மக்களும் வருத்தத்தில் இருந்தனர். அவர்களை சற்று நிம்மதி அடைய வைக்கும் அளவிற்கு தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி லேண்டரை தரையிறக்கிய ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை ஒரு ஆண்டுக்கு சுற்றிவரும். அப்போது நிலவை பற்றிய தகவல்களை இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கு