முக்கியச் செய்தி

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில்  தமிழக முதல்வர்

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் தமிழக முதல்வர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:- அமெரிக்காவின் சான்ஃ பிரான்சிஸ்கோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தை அடைந்தபோது, விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள், முதல்வர் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் அனாஹெய்ம் பகுதிக்கு அவர் சென்றார். அங்குள்ள மிகப்பெரிய கழிவு நீர் மறுசுழற்சி நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவு நீரை முழுவதுமாக மறுசுழற்சி செய்து தூய்மையாக்கி மீண்டும் அதனைப் பயன்படுத்தும் முறை குறித்து முதல்வருக்கு விளக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் தாக்குதல் தலிபான் ஆளுநர் பலி

ஆப்கானிஸ்தான் தாக்குதல் தலிபான் ஆளுநர் பலி

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அந்த நாட்டில் பாதுகாப்பு நிலைத்தன்மையற்ற சூழ்நிலை உள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டு ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், பதக்ஷான் பகுதியின் ஆளுநராக உள்ள கியாரி பசிஹுதீன் என்பவர் வார்தஜ் மாவட்டத்தில் நடந்த அரசின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் பசிஹுதீனின் காவலர்களில் ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது. எனினும் ராணுவ அமைச்சக அறிக்கையை தலீபான் அமைப்பு மறுத்துள்ளது.
ராஜ்நாத்சிங் தென்கொரியா பயணம்

ராஜ்நாத்சிங் தென்கொரியா பயணம்

3 நாட்கள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தென்கொரியா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது  தென் கொரிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜோயாங் கியோங் டூ - வை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள், பாதுகாப்பு  நிறுவனங்களுடனான  ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது  ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  தனது தென்கொரிய சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று,  கடந்த ஆண்டு (2018) வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சந்தித்துக்கொண்ட  பன் ஜோம் பகுதிக்கு ராஜ்நாத் சிங் சென்றார். தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் அமைதிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பன்-முன்-ஜோம் நகரில்  கடந்த 2018-ல்  இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். இந்த பகுதி ராணுவமற்ற பகுதி என்று அ
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு

சென்னை,இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு, தலைவர்கள், பொதுமக்கள்  பிரபலங்கள் அன அனைத்து தரப்பினரும்  சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  அந்த வகையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ சந்திரயான் -2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும், பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது.  இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 
மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல்

மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல்

மும்பை,மும்பை பெருநகர எல்கைக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், 10-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் தானே- காய்முக்- சிவாஜி சவுக் இடையே 11 கி.மீ. தூரத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி செலவிலும், 11-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் வடலா- மும்பை சி.எஸ்.எம்.டி. இடையே சுரங்கமார்க்கமாக 14 கி.மீ. தூரத்துக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவிலும், 12-வது மெட்ரோ ரெயில் வழித்தடம் கல்யாண்- நவிமும்பை தலோஜா இடையே 25 கி.மீ. தூரத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி செலவிலும் செயல்படுத்தப்பட உள்ளன.இந்த மூன்று மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் அண்மையில் மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.இதைத்தொடர்ந்து 10, 11 மற்றும் 12-வது மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை இன்று (சனிக்கிழமை) மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள மாநாட்டு மையத்த