முக்கியச் செய்தி

தற்போது கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்திருப்பார்

தற்போது கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்திருப்பார்

கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கதர்கடை அருகே கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் திமுக விவசாய அணி செயலாளரும் முன்னாள் திமுகமாநிலங்களவைஎம்.பியுமான கே.பி. ராமலிங்கம் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போது கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் புதிய கல்விக் கொள்கையை ஆதரித்திருப்பார். வரவேற்றிருப்பார். ஏற்றிருப்பார். அவர் இல்லாத குறை நாட்டில் நடைபெற்று கொண்டிருகிறது. புதிய கல்விக்கொள்கையின் முழுமையான பயன்களை அறியாமல், புரியாமல் சிலர் எதிர்த்து வருகின்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அமைச்சராக அவர் இருந்தபோது கருணாநிதி சொன்ன கருத்துக்களை ஏற்றுதான் இந்த
சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு

இ.ஐ.ஏ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என்றும், மு.க.ஸ்டாலின் அல்ல என்றும் குறிப்பிட்டார். இதேபோன்று சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழு தரும் அறிக்கையின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொண்டார். அத்துடன் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் எனவும், அவசரகால மருத்துவ பணியாளர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரண உதவி வ
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. திண்டுக்கல்லில் இதுவரை 43,578 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பான பணிகளை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. அரசின் அறிவுரையை மக்கள் கடைபிடித்தால் விரைவில் இயல்வுநிலைக்கு திரும்பலாம். பொதுமக்கள் வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினைப் பதிவுசெய்து வருகின்றனர். வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும். நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செங்குத்தான சரிவுக்குப் பிறகு மேலெழும்பி வரும் சீனப்பெருளாதாரம் !

செங்குத்தான சரிவுக்குப் பிறகு மேலெழும்பி வரும் சீனப்பெருளாதாரம் !

கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இத்தொற்று நோய்யை கட்டுப்படுத்த உலகளவில் 8.1 முதல் 15.8 டிரில்லியன் டாலர் வரை செலவாகி இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வரலாறு காணாத அளவில் வேலை இழப்பு, வருமானம் இழப்பு, பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 27 உறுப்பு நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில்,மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் காலாண்டில் இருந்ததை விட 39.8% என்ற வருடாந்திர வீதத்தில் சரிந்தது. 19 உறுப்பினர்களைக் கொண்ட யூரோப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 40.3 சதவீதத்தில் சரிந்தது. ஒப்பிடுகையில், அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.9 சதவீதத்தில் குறைந்துள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததால் ஐரோப்பாவின் பொருளாதாரம் சரிந்தது.இதில் ஒரு நல்ல செய்தி எ
உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன: மோடி

உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன: மோடி

அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று(ஆக., 5) நடந்தது . 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:- நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம். உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை எனது பாக்கியமாக கருதுகிறேன்.ஒரு கட்டத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவோம் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள். நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது. இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை.சரயு நதிக்கரையோரம் பொன்னான வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.வாழ்க்கையில் மிகவும்
சகுந்தலா தேவி

சகுந்தலா தேவி

திரை விமர்சனம் திருமணம் வாயிலாகத் தன் தனித் தன்மையைப் பெண்கள் இழந்து விடக் கூடாது ; தன் குறிக்கோளை அடைய இதன் பொருட்டு சமரசம் செய்வதை விரும்பாத பெண்ணாக அக் காலத்திலேயே பெரும் புரட்சி செய்த பெண்மணியின் வரலாற்றை வெளிப்படுத்தும் படமாக சகுந்தலாதேவி இருக்கிறாள். தன் வாழ்நாளில் பெண் அடக்குமுறை, குடும்ப அமைப்பு முறை, ஆண் பெண் சமத்துவம் என்ற பல இன்றைக்கும் விவாதப் பொருளாக இருக்கின்றபோது அக் காலத்திலேயே அவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை செய்த பெண்மணி சகுந்தலாதேவி.அவர் கடந்து வந்த பாதையை வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனு மேனன். நடிகை வித்யா பாலன், சானியா மல்ஹோத்ரா ஆகியோரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ‘சகுந்தலா தேவி’.கணித மேதை என்றும் மனிதக் கணினி . என்றும் அழைக்கப் பட்ட சகுந்தலாதேவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். வாழ்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது சற்றே ச
பாஜகவில் இணைய உள்ளார் தி.மு.க. எம்.எல். கு.க. செல்வம்

பாஜகவில் இணைய உள்ளார் தி.மு.க. எம்.எல். கு.க. செல்வம்

ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த இவர் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு

காஷ்மீரில் இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு நாளையுடன் ஒராண்டு நிறைவு பெறுகிறது. இந்த நாளை, பிரிவினைவாத அமைப்புகளும், பாகிஸ்தான்., ஆதரவு பெற்ற குழுவினரும் கறுப்பு நாளாக அனுசரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கும், அவர்களின் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என போலீசாரும் உளவுத்துறையினரும் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் நாளை மறுநாள் வரை 144 தடை உத்தரவு காஷ்மீர் மாநிலம் முதல் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா சூழ்நிலையில், மருத்துவ அவசர நிலை, உரிய அடையாள அட்டையுடன் அதிகாரிகள் நடமாட்டத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஆக., 5ல் காஷ்மீர் மாநிலத்திற்கு
இருமொழி கல்விக் கொள்கையே தொடா்ந்து பின்பற்றப்படும்: முதல்வர்

இருமொழி கல்விக் கொள்கையே தொடா்ந்து பின்பற்றப்படும்: முதல்வர்

தமிழகத்தில் இருமொழி கல்விக் கொள்கையே தொடா்ந்து பின்பற்றப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட விரிவான அறிக்கை:- 1963-ஆம் ஆண்டின் அலுவல் மொழிகள் சட்டத்தின் 3-ஆவது பிரிவில், ஹிந்தியை அலுவல் மொழியாகப் பின்பற்றாத மாநிலங்களுக்கு, ஆங்கில மொழி தகவல் பரிமாற்ற மொழியாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், 1965-ஆம் ஆண்டில் ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிா்த்து, மாணவா்களும், மக்களும் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினா். மக்களிடையே மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காத காரணத்தால், அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு, தம