தமிழ்நாடு

நீங்கள் தான் கடவுள்: செவிலியர்களை தரையில் விழுந்து வணங்கிய டீன்

நீங்கள் தான் கடவுள்: செவிலியர்களை தரையில் விழுந்து வணங்கிய டீன்

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன், கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்களுக்கு தரையில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச செவிலியர் தினத்தை ஒட்டி கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கு வருகை தந்த, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன், 'தற்போதைய நெருக்கடியான சூழலில் நீங்கள் தான் கடவுள்' எனக் கூறி, கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, செவிலியர்கள் முன்னிலையில் தரையில் விழுந்து வணங்கினார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதப்பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குஒரு வேண்டுகோள் விடுத்து மெயில் அனுப்பியுள்ளார்." என் அரசியல் வழிகாட்டியும்,நம் பரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குஎன் வணக்கம்.கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக நீங்கள் எடுக்கும் அனைத்து செயல்களுக்கும்என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .என்னுடைய வேண்டுகோளை பரிசீலித்து உடனடியாகஆவன செய்ய வேண்டுகின்றேன் .அரசு இலவசமாக அரசு மருத்துவமனைகளிலும்,சுகாதார மையங்களிலும் இலவசமாக தடுப்பூசி இரண்டுடோஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதே சமயம் மருத்துவ காப்பீட்டு பாலிசிதாரர்கள் /மருத்துவகுடும்ப காப்பீட்டு அட்டைவைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டின் கீழ் தனியார் மருத்துவ மனைகளில் தடுப்பூசி போடஉடனடியாக ஆவன செய்ய வேண்டும். இதை அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் காப்பீட்டு சேவைக்குள்இந்த தடுப்பூசி
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னை, தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவே இதுவரை பதிவான தினசரி பாதிப்பில் அதிக எண்ணிக்கையாக இருந்து வந்த நிலையில் நேற்று முதல் முறையாக 7,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று 2வது நாளாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95,387 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,62,935 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை
திண்டுக்கல் ரயில் நிலையத்தில்<br>தேஜஸ் ரயிலுக்கு மலர் தூவி<br>உற்சாக வரவேற்பு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில்
தேஜஸ் ரயிலுக்கு மலர் தூவி
உற்சாக வரவேற்பு

திண்டுக்கல்,ஏப்.3-. சென்னை - மதுரை இடையே பகல் நேர தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்தடைகிறது. பின்னர் மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னையை சென்றடையும். இந்த ரயில்கொடைரோடு, திருச்சியில் மட்டும் நின்று செல்லும் வகையில் இருந்தது. சென்னைக்கு 6.30 மணி நேரத்தில் பயணிகள் சென்றனர்.திண்டுக்கல் வர்த்தகர்கள், பொதுமக்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை விடுத்ததை அடுத்து ஏப்ரல் 2ம் தேதியிலிருந்து திண்டுக்கல்லில் நின்று செல்லும் என்று ரயில் நிர்வாகம் அறிவித்தது.அதன்படி சென்னையிலிருந்து - மதுரை சென்ற தேஜஸ் ரயில் நேற்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்றது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்ற தேஜஸ் ரயிலுக்கு மேளதாளம் முழங்க, மலர்தூவி பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் வரவேற்பு அளித்தனர். காலை 11 மணியளவில் வந்த தேஜஸ், 2
திமுக தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்

திமுக தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்

அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் ஆவின்பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40% ஆக அதிகரிக்கப்படும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை 12 மாதங்களாக உயர்த்தப்படும் இந்து கோயில்களின் குடமுழுக்குக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் மசூதி, தேவாலயங்களை சீரமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கப்படும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், அரசு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் சிறுகுறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியமாக வழங்கப்படும் தமிழக சட்டமன்றத்தில் சட்டமேலவை மீண்டும் கொண்டுவரப்படும் 500 இடங்களில் கலைஞர் உணவகம் கொண்டுவரப்படும்
வேட்பாளர் தேர்வு குறித்து ஜோதிமணி எம்பி அதிருப்தி

வேட்பாளர் தேர்வு குறித்து ஜோதிமணி எம்பி அதிருப்தி

வேட்பாளர் தேர்வு குறித்து ஜோதிமணி எம்பி தன்னுடைய அதிருப்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டரில், “காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை. காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகல்

அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். விஜயகாந்த் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நடைபெறவுள்ள 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல், தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து வந்த காரணத்தினால் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்திகளின் அடிப்படையில் இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ஸ்டாலின்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் ஸ்டாலின்

காவிரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம் எனவும் கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன்.l9j குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்” என்றார்.
தூத்துக்குடி மாநகரில் மீனவ பகுதியில் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடி மாநகரில் மீனவ பகுதியில் கொடி அணிவகுப்பு

தூத்துக்குடி மாநகரில் மீனவ பகுதியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சிலுவைபட்டியில் துவங்கி தாளமுத்துநகர், லூர்தம்மாள்புரம் வழியாக திரேஸ்புரம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் இருந்து 516 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சட்டவிரோதமாக செயல்பட்ட 37 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என தெரிவித்தார். மேலும் 1,280 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி அமைத்துள்ள கூட்டணியில், தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்திய ஜனநாயக கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. சென்னையில் நடைபெற்ற தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே. குமரவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.