விவசாயம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர்  உத்தரவு

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

விவசாயம்
பாசனத்திற்காக மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாயில் 17ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து 17.8.2020 முதல் 31.12.2020 வரை தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு ம
நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 95.10 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் 9 அடி அதிகரித்து 100 அடியை நெருங்குகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியில் இருந்து 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 58.67 டிஎம்சியாக உள்ள நிலையில் பாசனத்துக்காக 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்த பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்ட ஆர்ப்பாட்டம்!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கண்ட ஆர்ப்பாட்டம்!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூர், நாகப்பட்டிணம் ,திருவாரூர், மயிலாடுதுறை கும்பகோணம், உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. திருவாரூரில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. கூட்டுறவு வங்கிகளை முடக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தமிழக அரசு துணை போவது ஜெயலலிதாவிற்கு செய்யும் துரோகம்பி.ஆர்.பாண்டியன்., . மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கைக்கு தமிழக அரசு துணை போவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக கூட்டுறவுத் துறை பதிவாளர் கடந்த 27ம் தேதி தொடக்க வேளாண் வங்கிகளுக்கு கடன் வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்தும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு (மிரர் அக்கவுண்ட்) துவங்கி கடன் பெற்றுக் கொள்ள உத்திரவிட்ட பின் பணி
பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- ஈரோடு மாவட்டம் பவானிசாகா் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று, பவானிசாகா் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக பாசனத்துக்கு ஆகஸ்ட் 1 முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை 120 நாள்களுக்கு 8,812.80 மில்லியன் கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளேன். இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, அந்தியூா் வட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயா் மகசூல் பெற வேண்டும் எ

ஜூலை 27 கருப்புக்கொடி ஏந்தி அறப்போர்

வைகோ அறிக்கை கொரோனா தீநுண்மி ஏற்படுத்தி வரும் துயரத்தால் கடந்த 5 மாதங்களாக நாட்டு மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, வாழ்வாதாரங்களை முற்றிலும் பறிகொடுத்துவிட்டு, எதிர்காலம் இருள் அடைந்து கிடக்கின்ற வேதனையில் தவிக்கின்றனர். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் மாநில அரசுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச்சாதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும
பாராம்பரிய நெல் திருவிழா

பாராம்பரிய நெல் திருவிழா

விவசாயம்
தமிழக டெல்டா மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்புடன் நடத்தப்படும் பாரம்பரிய நெல் திருவிழா இந்த ஆண்டும் திருவாரூரில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 14 -வது தேசிய நெல் திருவிழாவை ஒட்டி 10 வகையான பாரம்பரிய நெல் விதைகள் தலா 2 கிலோ விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இயற்கை முறை சாகுபடிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர். மாநில அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஜூலை 31ல் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம்

ஜூலை 31ல் விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம்

பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் காணொளி காட்சி மூலம் தஞ்சை மண்டல தலைவர் என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தை பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஒருங்கிணைத்து நாத்திய பின் கூட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.. தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் செயலற்று முடங்கி உள்ளது. வேளாண் கடன் கிடைக்காத விவசாயிகள் மனமுடைந்து செய்வது அறியாது உள்ளனர் எனவே நிபந்தனையின்றி சாகுபடி பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் பழைய முறையை பின்பற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட வேண்டும். வேளாண் கூட்டுறவு வங்கிகளை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்தும் தமிழக அரசு உடனடியாக பழைய நடைமுறையை பின்பற்றி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிட உரிய அரசாணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு ச
கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்: ராமதாஸ்

கூட்டுறவு சங்கம், வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை உடனே தொடங்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டிலுள்ள 4700-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும், அவற்றின் கிளைகளிலும் நகைக்கடன் வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் மற்றும் உழவர்கள் கைகளில் பணப்புழக்கமின்றி, தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் கடன் பெறுவதற்கு இருந்த ஒரே வாய்ப்பும் மூடப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தின் மீது மிக மோசமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று 125-ஆவது நாளை எட்டியிருக்கிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் நோக்கம் மக்களைக் காக்கும் எண்ணம் கொண்டது என்றாலும் கூட, அதன் பொருளாதார பக்க விளைவுகள் மிகவும் மோசமானவை. கொரோனா வைரஸ் பரவலால் உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில்  ஏற்பட்ட பாதிப்புகளை
வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் கார்டு எனப்படும் பணப்பரிவர்த்தனைக்கான அட்டைகள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு ஏடிஎம் அட்டைகள் வழங்கும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இதனை அனைத்து வங்களின் கீழ் செயல்படும் ஏடிஎம் மையங்களிலும் பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களாக விவசாயிகளுக்கு முதல் கட்டமாக உள்ள 160 பேருக்கு ஏடிம் அட்டைகள் வழங்கப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ப.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
மக்களின் பேராயுதமாகவும் ஊடகங்கள் விளங்கி வருகிறது: பி.ஆர். பாண்டியன்

மக்களின் பேராயுதமாகவும் ஊடகங்கள் விளங்கி வருகிறது: பி.ஆர். பாண்டியன்

தமிழ்நாட்டில் சமீப காலமாக காவிரி உரிமைக்கான போராட்டம், விவசாயி களுக்கான வாழ்வாதாரப் பிரச்சினைகள் மீட்பு,தமிழ் மொழி கலாச்சாரத்தை சீரழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கல்வி மீது துவக்கப்படும் தாக்குதல்கள், கூட்டாட்சி தத்துவத்தை ஒடுக்க நினைப்பது, பொதுத் துறைகள் தனியாருக்கு தாரைவார்ப்பது போன்ற மக்கள் விரோத சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிரான அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இது குறித்து மக்களின் எண்ணங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசின் கொள்கை நிலைகள் தெளிவு படுத்துவதற்கான சாதனமாக ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். பாதிக்கப்படும் மக்களின் பேராயுதமாகவும் ஊடகங்கள் விளங்கி வருகிறது. இவற்றின் மூலம் கிடைக்கும் கருத்துக்களை உள்வாங்கி மக்களுக்கான வகையில் தங்களை மாற்றிக் கொள்வது நாகரிகமான அரசியல் பண்பாடாக அமையும். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகளின் போர்வையில் தங்களை மக்களி