கலைச்சோலை

வேறென்ன… ?

வேறென்ன… ?

ஆதி இரகசிய சாயலொத்தஅகச் சலனமொன்று குறுகுறுக்கிறது! தேக்கி வைக்கப்பட்ட நினைவுப் பிசிறுகளின் கிசுகிசுப்பால் நாளங்கள்இறுகி மௌனிக்கின்றன! ஆழ்ந்த பித்தொன்றின்ஆர்ப்பரித்த வாதைகள்விழியோர உதிரலின் மொழிபெயர்ப்பில்அடங்கிச் சமனப்படுகின்றன! அழுத்தத்தின் அதிர்வில்அசையத் துவங்கியபேரண்ட ஒற்றைத்துளியின் உடைதல்இயல்பாய் நடந்தேறியது! இனி எஞ்சியிருப்பதுமாயத் தூக்கம் கொள்ளும்அந்திமக் கனலின் அணைப்பேயன்றி வேறென்ன? - அன்புச்செல்வி சுப்புராஜூ
யார் வந்து துயில் எழுப்புவார்?

யார் வந்து துயில் எழுப்புவார்?

ஆயர்பாடி மாளிகையில்மாயக் கண்ணனை துயில் எழுப்பினாய்.. தூங்காதே தம்பி தூங்காதே என்றுஇளம் தலைமுறையினருக்கு விழிப்பூட்டினாய்.. உறங்காத விழிகளை தென்றலாய்தாலாட்டினாய்… ஊர் போகும் பயணங்களில்வழித்துணையாய் வந்தாய்..! இளம் நெஞ்சங்களின் கனவுகளில்ஆயிரம் நிலவாய்.. ஜெலித்தாய் காதலாய் கசிந்துருகினாய்..பாசமாய் இசையமுதூட்டினாய்கண்ணீர் மல்கும் கவலையிலும்கானங்களாய் காதுகளில் ஒலித்தாய்..! இசைவானில் சிறகு விரித்த உன் குரலைகாற்றலையில் மிதக்க விட்டுவிட்டுமெளனராகம் இசைத்தபடியே..மீளாநித்திரையில் ஆழந்த உன்னை யார் வந்து துயில் எழுப்புவார்? திருமலை சோமு, பெய்ஜிங்
சர்வதேச அமைப்பை பாதிக்குமா சீனா-அமெரிக்கா இடையிலான மோதல்!

சர்வதேச அமைப்பை பாதிக்குமா சீனா-அமெரிக்கா இடையிலான மோதல்!

உறவுகளில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் சண்டை போல் உலகில் நாடுகளுக்கு இடையிலான கருத்து மோதல்களும், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்பானதா இருக்கிறது.கருத்து மோதல்களை கடந்து வெளியுறவுகளை சுமூகமாக பேணுவது, உலக அமைதிக்கும் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனாலும் சில வேளைகளில் சொந்த நாட்டின் நலனுக்காக அந்நிய நாட்டுடனான உறவில் மோதல் ஏற்படுவதும் பின்னர் அதை இருதரப்பும் சமரசமாக பேசித் தீர்த்துக் கொள்வதும் இன்று நேற்று அல்ல வரலாற்று காலம் தொட்டே நிலவும் ஒன்றாகும். அந்த வகையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த வர்த்தகப் போர், அதைத்தொடர்ந்து பெருந்தொற்று பேரிடர் காலத்திலும் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல் சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளு
இயற்கையோடு இயற்கையாக

இயற்கையோடு இயற்கையாக

முதன்முதலாக வாக்மேன் வாங்கியபோது "காதலெனும் தேர்வெழுதி!" முதன்முதலாக பேட்டரி CD ப்ளேயர் வாங்கிய போது "அத்திந்தோம் " ஸ்பீக்கர் வாங்கி ஆணியடித்து சுவற்றில் மாட்டியபோது "பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க!" மனம் சோர்வுற்ற போது "வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!" ஒருதலையாய் காதல் வயப்பட்டபோது"என்னைக் காணவில்லையே நேற்றோடு!" காதல் கதை எழுதி வானொலியில் வாசித்த போது "என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?" வசீகரப் பெண்களை தூர நின்று ரசித்த போது "சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது!" காதல் தோல்வி உறுதியானபோது "இதயமே இதயமே!" நடனம் ஆட ஆசை வரும்போது "காதலிக்கும் பெண்கள் கையை தொட்டு நீட்டினால்…" மோகனை நினைத்து நெக்குருகும் போது "பாடு நிலாவே! " ராமராஜனை ரசிக்கும் போது "மாங்குயிலே பூங்குயிலே!" சின்னக்கவுண்டராய் விஜயகாந்தைகொண்டாடியபோது "முத்துமணி மாலை" அம்
சுவாசமே எங்கள் சுவாசமே

சுவாசமே எங்கள் சுவாசமே

சுவாசமே எங்கள் சுவாசமே நீயேஎன்னச் சொல்ல என்னச் சொல்லஎதைச் சொல்ல எப்படிச் சொல்லஎங்கும் நீயே எதிலும் நீயே சோர்ந்த பாமரனுக்கும் சோர்விலா பாலகனுக்கும்சோம்பும் காதலனுக்கும் சொக்கும் காதலுக்கும்வேகும் மனத்திற்கும் வேண்டும் மனத்திற்கும்எங்கும் நீயே எதிலும் நீயே குரலில் தேன்கொண்டு மருந்தானாய்கருத்தில் மெய்கொண்டு வழிக்காட்டி ஆனாய்முறுவலில் குழந்தைக் கொண்டு ஊக்கியானாய்தருவதில் தர்மம்கொண்டு குலதெய்வ மானாய் கண்ணனுக்கு உயிர்ப்பாக்கி உள்ளம் புகுந்தாய்மண்ணில் இக்காதலோடு கானம் பாடிவிண்ணில் கண்ணன் குழலோடு கலந்தாயேகணக்கற்ற உள்ளத்தில் உறையும் SPB இரா.விஜயகல்யாணி
“படைப்பாளர் ஞாயிறு”

“படைப்பாளர் ஞாயிறு”

கலைச்சோலை
கக கவிதைகள் மற்றும் காக்கை பிரதிநிதிகள் இணைந்து கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை "படைப்பாளர் ஞாயிறு" நிகழ்வினை இணையவழியில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது "இணையவழி ஹைக்கூ பயிற்சி பட்டறை" நிகழ்வு நடந்து வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 20/09/2020 அன்று கவிஞர்.சாரதா சந்தோஷ் அவர்கள் " தமிழ் ஹைக்கூகளில் பெண்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். கக கண்ணன் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்வு தொடங்கியது. கவிஞர்.சாரதா சந்தோஷ் அவர்கள் தமிழ் ஹைக்கூ உலகில் பெண்களின் பங்களிப்பு பற்றிய தனது உரையில் சங்க இலக்கியக்காலம் தொட்டு இலக்கிய உலகில் பெண்களின் பங்களிப்பு குறித்து ஆரம்பித்து பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் ஆண்டுகளில் பயணித்து இருபதாம் ஆண்டின் கவிஞர்கள் வரை குறிப்பிட்டது சிறப்புற இருந்தது. தமிழ் ஹைக்கூ பெண் கவிஞர்கள்
தன்முனைக் கவிதைகள்

தன்முனைக் கவிதைகள்

*சங்கு பால் குடிப்பதற்குஅடம் பிடிக்கிறது.இறுதி காலத்தில்அப்பாவின் உயிர். *அடுத்த கட்ட நகர்வினால்நகர்ந்து செல்லும் மனிதா!நல்ல நட்புகளையும்உதறி செல்கிறாய். *உனது உயரம் கண்டுஉச்சி முகர்ந்து பார்க்கிறோம்உதாசீனப் படுத்துகிறாய்உன் வெட்டி கர்வத்தால். *வயதான மேனிபோல்வறண்டு போன பூமிவாழ்வதற்கு உணவில்லைவந்து சேர் மாரியே. *மடிமுட்டி பால் பருகதுடிக்கின்றது கன்றுவாய் கவசம் தடுக்கின்றதுபசியாரா கன்று. - மணவை கார்ணிகன்
ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம் ஆதவன் அவனேஆயிலை உறையும் மாதவன் அவனே வேதத்தில் விரவும் வேங்கடன் அவனேபேதத்தில் மறையும்வேணுவும் அவனே கோபத்தில் சுடரும்கோவிந்தன் அவனேதாபத்தில் துளிரும்தாமோதரன் அவனே முக்தியை அளிக்கும்சூட்சமும் அவனேபக்தியை நல்கும்பரமனும் அவனே வாமன மூர்த்தியும்வாராகமும் அவனேகோதண்ட மூர்த்தியும்கோதைமணாளனும் அவனே கும்பிட்டோருக்கு நம்பிக்கை தும்பிக்கை அவனேதண்டனிட்டே வணங்கித்துதித்பாடுவோம் அவனை கோவிந்தா ஹரே கோவிந்தாமாதவ கேசவ நரசிம்மா கோவிந்தா ஹரே கோவிந்தா இரா.விஜயகல்யாணி
ஒற்றைச் சிலம்பு.!

ஒற்றைச் சிலம்பு.!

மவுனப் பாறையைசப்த உளியால்செதுக்கிய சிலைஎன் கவிதை. யாழ் மீட்டும்அவள் கரங்கள்..தீமூட்டி வைத்ததுஒற்றைச் சிலம்பு.! ஆயிரம் நாமங்களில்அர்ச்சனை எதற்கு.?அம்மா என்றுஅழைத்தவர்க்கு.! மவுனப் பாறையைசப்த உளியால்செதுக்கிய சிலைஎன் கவிதை. உடன் விளையாடவந்துள்ள கடவுள்..அடடா.. குழந்தைகையில் பொம்மை! வே.கல்யாணகுமார். பெங்களூரூ.
திருவரங்கத் திருமாலை

திருவரங்கத் திருமாலை

கலைச்சோலை
திசைகள் இணைய வானொலியில் 2020 புரட்டாசி 1 முதல், தொண்டரடிப்பொடியாழ்வார் (விப்ர நாராயணர் ) அருளிய திருப்பள்ளியெழுச்சி. பாசுர உரை விளக்கம் வழங்குபவர், கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், கல்வி ரத்னா, பாரத கவி, தேசியக் கவி திருமதி பி மீராபாய், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர், திண்டுக்கல் (மா).