
கரோனாவின் தோற்றம்: சீனாவுக்கு அப்பாலும் உண்மையை தேடுவோம்…!
ஓராண்டு கடந்தும் ஓயாத பெரும் துயரமாக தொடரும் கரோனா எனும் பேரிடர் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனத்திலும் இருக்கிறது. தடுப்பு மருந்து சந்தைக்கு வந்துவிட்டபின்னும், இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் உலகம் தத்தளித்துவரும் நிலையில் கரோனாவின் தோற்றம் பற்றிய ஆய்வும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம் என ட்ரம்ப் உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சீனா மறுத்து வந்ததோடு உலக சுகாதார அமைப்பின் ஆராய்சிக் குழு தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த ஆண்டு இறுதியில் சீன அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இதையடுத்து கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஆராய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு சீனா சென்றடைந்தது.2019 டிசம்பருக்கு முன்பு வுஹானில் வைரஸ் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. வுஹானில்தான் இந்த வைரஸ் தோன்ற