கவிதை

வேறென்ன… ?

வேறென்ன… ?

ஆதி இரகசிய சாயலொத்தஅகச் சலனமொன்று குறுகுறுக்கிறது! தேக்கி வைக்கப்பட்ட நினைவுப் பிசிறுகளின் கிசுகிசுப்பால் நாளங்கள்இறுகி மௌனிக்கின்றன! ஆழ்ந்த பித்தொன்றின்ஆர்ப்பரித்த வாதைகள்விழியோர உதிரலின் மொழிபெயர்ப்பில்அடங்கிச் சமனப்படுகின்றன! அழுத்தத்தின் அதிர்வில்அசையத் துவங்கியபேரண்ட ஒற்றைத்துளியின் உடைதல்இயல்பாய் நடந்தேறியது! இனி எஞ்சியிருப்பதுமாயத் தூக்கம் கொள்ளும்அந்திமக் கனலின் அணைப்பேயன்றி வேறென்ன? - அன்புச்செல்வி சுப்புராஜூ
யார் வந்து துயில் எழுப்புவார்?

யார் வந்து துயில் எழுப்புவார்?

ஆயர்பாடி மாளிகையில்மாயக் கண்ணனை துயில் எழுப்பினாய்.. தூங்காதே தம்பி தூங்காதே என்றுஇளம் தலைமுறையினருக்கு விழிப்பூட்டினாய்.. உறங்காத விழிகளை தென்றலாய்தாலாட்டினாய்… ஊர் போகும் பயணங்களில்வழித்துணையாய் வந்தாய்..! இளம் நெஞ்சங்களின் கனவுகளில்ஆயிரம் நிலவாய்.. ஜெலித்தாய் காதலாய் கசிந்துருகினாய்..பாசமாய் இசையமுதூட்டினாய்கண்ணீர் மல்கும் கவலையிலும்கானங்களாய் காதுகளில் ஒலித்தாய்..! இசைவானில் சிறகு விரித்த உன் குரலைகாற்றலையில் மிதக்க விட்டுவிட்டுமெளனராகம் இசைத்தபடியே..மீளாநித்திரையில் ஆழந்த உன்னை யார் வந்து துயில் எழுப்புவார்? திருமலை சோமு, பெய்ஜிங்
இயற்கையோடு இயற்கையாக

இயற்கையோடு இயற்கையாக

முதன்முதலாக வாக்மேன் வாங்கியபோது "காதலெனும் தேர்வெழுதி!" முதன்முதலாக பேட்டரி CD ப்ளேயர் வாங்கிய போது "அத்திந்தோம் " ஸ்பீக்கர் வாங்கி ஆணியடித்து சுவற்றில் மாட்டியபோது "பூப்பறிக்கிற நோம்பிக்கெல்லாம் வாங்க!" மனம் சோர்வுற்ற போது "வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்!" ஒருதலையாய் காதல் வயப்பட்டபோது"என்னைக் காணவில்லையே நேற்றோடு!" காதல் கதை எழுதி வானொலியில் வாசித்த போது "என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப்போகிறாய்?" வசீகரப் பெண்களை தூர நின்று ரசித்த போது "சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது!" காதல் தோல்வி உறுதியானபோது "இதயமே இதயமே!" நடனம் ஆட ஆசை வரும்போது "காதலிக்கும் பெண்கள் கையை தொட்டு நீட்டினால்…" மோகனை நினைத்து நெக்குருகும் போது "பாடு நிலாவே! " ராமராஜனை ரசிக்கும் போது "மாங்குயிலே பூங்குயிலே!" சின்னக்கவுண்டராய் விஜயகாந்தைகொண்டாடியபோது "முத்துமணி மாலை" அம்
சுவாசமே எங்கள் சுவாசமே

சுவாசமே எங்கள் சுவாசமே

சுவாசமே எங்கள் சுவாசமே நீயேஎன்னச் சொல்ல என்னச் சொல்லஎதைச் சொல்ல எப்படிச் சொல்லஎங்கும் நீயே எதிலும் நீயே சோர்ந்த பாமரனுக்கும் சோர்விலா பாலகனுக்கும்சோம்பும் காதலனுக்கும் சொக்கும் காதலுக்கும்வேகும் மனத்திற்கும் வேண்டும் மனத்திற்கும்எங்கும் நீயே எதிலும் நீயே குரலில் தேன்கொண்டு மருந்தானாய்கருத்தில் மெய்கொண்டு வழிக்காட்டி ஆனாய்முறுவலில் குழந்தைக் கொண்டு ஊக்கியானாய்தருவதில் தர்மம்கொண்டு குலதெய்வ மானாய் கண்ணனுக்கு உயிர்ப்பாக்கி உள்ளம் புகுந்தாய்மண்ணில் இக்காதலோடு கானம் பாடிவிண்ணில் கண்ணன் குழலோடு கலந்தாயேகணக்கற்ற உள்ளத்தில் உறையும் SPB இரா.விஜயகல்யாணி
தன்முனைக் கவிதைகள்

தன்முனைக் கவிதைகள்

*சங்கு பால் குடிப்பதற்குஅடம் பிடிக்கிறது.இறுதி காலத்தில்அப்பாவின் உயிர். *அடுத்த கட்ட நகர்வினால்நகர்ந்து செல்லும் மனிதா!நல்ல நட்புகளையும்உதறி செல்கிறாய். *உனது உயரம் கண்டுஉச்சி முகர்ந்து பார்க்கிறோம்உதாசீனப் படுத்துகிறாய்உன் வெட்டி கர்வத்தால். *வயதான மேனிபோல்வறண்டு போன பூமிவாழ்வதற்கு உணவில்லைவந்து சேர் மாரியே. *மடிமுட்டி பால் பருகதுடிக்கின்றது கன்றுவாய் கவசம் தடுக்கின்றதுபசியாரா கன்று. - மணவை கார்ணிகன்
ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம்

ஆனந்தம் பரமானந்தம் ஆதவன் அவனேஆயிலை உறையும் மாதவன் அவனே வேதத்தில் விரவும் வேங்கடன் அவனேபேதத்தில் மறையும்வேணுவும் அவனே கோபத்தில் சுடரும்கோவிந்தன் அவனேதாபத்தில் துளிரும்தாமோதரன் அவனே முக்தியை அளிக்கும்சூட்சமும் அவனேபக்தியை நல்கும்பரமனும் அவனே வாமன மூர்த்தியும்வாராகமும் அவனேகோதண்ட மூர்த்தியும்கோதைமணாளனும் அவனே கும்பிட்டோருக்கு நம்பிக்கை தும்பிக்கை அவனேதண்டனிட்டே வணங்கித்துதித்பாடுவோம் அவனை கோவிந்தா ஹரே கோவிந்தாமாதவ கேசவ நரசிம்மா கோவிந்தா ஹரே கோவிந்தா இரா.விஜயகல்யாணி
ஒற்றைச் சிலம்பு.!

ஒற்றைச் சிலம்பு.!

மவுனப் பாறையைசப்த உளியால்செதுக்கிய சிலைஎன் கவிதை. யாழ் மீட்டும்அவள் கரங்கள்..தீமூட்டி வைத்ததுஒற்றைச் சிலம்பு.! ஆயிரம் நாமங்களில்அர்ச்சனை எதற்கு.?அம்மா என்றுஅழைத்தவர்க்கு.! மவுனப் பாறையைசப்த உளியால்செதுக்கிய சிலைஎன் கவிதை. உடன் விளையாடவந்துள்ள கடவுள்..அடடா.. குழந்தைகையில் பொம்மை! வே.கல்யாணகுமார். பெங்களூரூ.
அச்சமில்லை அச்சமில்லை…

அச்சமில்லை அச்சமில்லை…

பாரதி… பார் அதிசயித்த பா ரதிபாய்ந்தோடிப்பசுமை தந்த பா நதிபைந்தமிழ்த் தேர் நடத்திய சாரதி. தலைப்பாகை அணிந்ததனிமனிதனைத் தூக்கித்தலைப்பாகையாய் அணிந்தாள்தமிழன்னை. இருட்டுப் பாதையில் நடந்தகுருட்டுப் புலவர்களுக்குஅவன் உருட்டு விழிகள்வழிகாட்டின. ஆனாலும் பாரதி… தீயின் நாவுன்னைத்தின்னக் கொடுத்ததன்பின்நாய் வாலைக் கண்டாலும்நாகமென அஞ்சுகின்றோம். அச்சமும் பேடிமையும்அடிமைச் சிறு மதியும்உச்சத்திற்கு கொண்டு தினம்ஓசையின்றித் துஞ்சுகின்றோம். என்ன செய்வது பாரதி ? உன் காலத்தில்பானைக்குள் தேளிருந்துபல்லால் கடித்ததென்றுபச்சைப் பொய் சொன்னவர்கள்வேலைக்காரர்கள். இப்போது அவர்கள்தான்தேசத்தலைவர்கள். மெல்லத் தமிழ் இனிச் சாகும்என்று சொன்னவன்அப்போது பேதை.இப்போது மேதை. சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லேஅதைத் தொழுது படித்திடடி என்றாய்.எங்கள் பாப்பாஆங்கிலக் கல்வியைஇப்போது அழுது படிக்கிறாள். ச
வீரத்தின் மறுஉருவம்.. பார..தீ..

வீரத்தின் மறுஉருவம்.. பார..தீ..

நெஞ்சத்தில் வீரமும்.. எழுத்தினில் துணிவும்..சாதீயம் பேசாத வாய்களும்.. வீணர்களுக்குழைக்காதவர்களும்..யாருக்காகவும் தன் சுதந்திரத்தைஇழக்காத தன்மானச் சிங்கங்களும். மனதில் உறுதி உள்ளவர்களும்..விடியலுக்காக கனவு காண்பவர்களும்.. சுயநலமில்லா பொது நலவாதிகளும்..தேசத்தையும் உயிராய் நேசிப்பவர்களும்.. பெண்மையை போற்றுபவர்களும்தமிழர் நலனை காப்பவர்களும்..இவர்கள் யாவரும்என் பாட்டன் பாரதியே..!! ஆசானே..தமிழுள்ளவரை..தமிழினமுள்ளவரைஉன் நாமம் வாழிய வாழியவே..!! சாரதா க. சந்தோஷ்ஐதராபாத்
முண்டாசுக் கவியே

முண்டாசுக் கவியே

பாரதியார் முண்டாசுக் கவியே முன்வினை பயனோமுலைப்பால் தந்தாள் கலைமகள் உமக்கேமுத்தான பாடல்கள் முனைந்து படைத்தாய்முன்மொழிந்த பாஞ்சாலியுரை உமதுவரியில் பொலிவானது நீரசித்த உயிரினங்களில் உள்ளம் உரைத்தாய்நீயாக மக்களைக் தீப்பொறி யாக்கினாய்தீஞ்சுவையாய் தமிழில் சொற்பதங்கள் தந்தாய்தேனாய் சந்தங்களில் தெவிட்டா பண்களில் வீறுக் கொண்டும் பேருவகைக் கொண்டும்பேறான தவசீலராய் சீராக்கினீர் பெண்ணியத்தைகூவும் குயிலுக்கும் கரையும் காக்கைக்கும்மியாவ்"வெனும் வண்ண பூனைகளுக்கும் குரைக்கும்நாயிக்கும் பிளிரும் யானைக்கும்உன்னால் மட்டுமே பாடங்கள் பதியும்படிஉன்னதப் படைப்பில் உலகுக்குத் தந்து தேசியக் கவியானீர் உன்னைப் பாட ஒருநாள் போதுமோஉயிர்ப்பு இருக்கும் வரை நீயே எமதுகுரு இரா.விஜயகல்யாணி