நூல் அறிமுகம்

எனவே தான் மழை!

நூல் ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடியார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,சென்னை-600 017.பக்கங்கள் : 136, விலை : ரூ. 110 ‘கவிதை உறவு’ மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் எப்போதும் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் சுறுசுறுப்பான ஆளுமையாளர். ‘கவிதை உறவு’ இதழில் எழுதிவந்த ‘என் பக்கம்’ கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். புகழ்பெற்ற வானதி பதிப்பகம் கொரோனா நெருக்கடி காலத்திலும் ஏர்வாடியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, உடன் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர் மிக நேர்த்தியான வடிவமைப்பு. இந்து தமிழ் நாளிதழ் உதவி ஆசிரியர் மானா பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 28 கட்டுரைகள் உள்ளன. ஏர்வாடியாரின் இனிய நண்பர் கனடா கவிஞர் சண்முகராஜா (மாவிலி மைந்தன்) அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும்
மேகத் துளி!

மேகத் துளி!

(ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிச்சுரபி சுப. சந்திரசேகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நூல் ஆசிரியர் கவிச்சுரபி சுப. சந்திரசேகரன் ‘மின்னல் தமிழ்ப்பணி’ மாத இதழ் ஆசிரியர். ‘பொதிகை மின்னல்’ ஆசிரியரும் இந்நூல் பதிப்பாளருமான கவிஞர் வசீகரன் அவர்களின் வலதுகரமாகத் திகழ்பவர் நூலாசிரியர். சென்னை பொதிகை மின்னல் விழாக்களில் பரபரப்பாகி இயங்கிக் கொண்டே இருக்கும் உழைப்புத் தேனீ..இருவரையும் இரட்டை குழல் துப்பாக்கி என்றே சொல்லலாம் .நூலாசியரின் சடையப்ப வள்ளல் கவிஞர் வசீகரன் . ‘மேகத் துளி’ என்ற நூலின் மூலம் ஹைக்கூ மழை பொழிந்துள்ளார். இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். "இலக்கியத்திற்காகவே துடிக்கும் இதயத்தின் கவிக்குரல்’" என்று தலைப்பிட்டுள்ளார். நூலாசிரியரின் ஹைக்கூ கவிதைகளை பொதிகை மின்னல், தமிழ்ப்பணி போன்ற இதழ்களில் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்த
மன வானில் உலா வரும் ஹைக்கூ …

மன வானில் உலா வரும் ஹைக்கூ …

வாழ்த்துரை - அஜித்குமார் ஒரு கவிஞன் என்பவன் தன்னுடைய வரிகளை வலிகளாக மாற்றம் செய்ய வேண்டும். கவிதை மூலம் கண்ணீரைச் சிந்த வேண்டும். கற்பனையைக் காட்சிப்படுத்த வேண்டும். மொத்தமாய் அவன் சமூக நதியில் இரை தேட வேண்டும். அண்ணன் இரா. இரவி, கவிதையில் சமூக மேம்பாட்டை அள்ளித் தெளிப்பவர் என்பது தான் நான் அறிந்த ஒன்று. ஒரு சமூகத்தின் உயர்வை, சீர்கேட்டை, விழிப்புணர்வை தனக்கே உரிய நடையில் உயர்த்திப்பிடித்து வாழும் அண்ணன் இரா. இரவி நிச்சயம் ஒரு நாள் சமூகத்தால் கொண்டாடுபவர் என்பது என் நழுவாத நம்பிக்கை. அண்ணன் எழுதிய “ஹைக்கூ உலா” என்னும் நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. உண்மையில் படிக்க படிக்க கவிதைகள் அனைத்தும் எனக்குள் சிறகு முளைத்து உலா வரத் தொடங்கிவிட்டன. நூலை நுட்பமாக படைத்தற்கு எனது சார்பாக வாழ்த்துக்களையும் என் அன்பில் பூத்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கவிதை நூலைப் படிக்கத் தொட
வருகை பற்றிய அறிவிப்பு

வருகை பற்றிய அறிவிப்பு

நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி vaduvursivamurali@gmail.com விமர்சனம் கவிஞர் இரா .இரவி eraeravik@gmail.com விலை ரூபாய் 50வெளியீடுஇருவாட்சி41.கல்யாணசுந்தரம் தெருபெரம்பூர் .சென்னை .11 நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி தமிழாசிரியராக மேல் நிலைப் பள்ளியில் பணி புரிந்துக் கொண்டே இலக்கியத்திலும் ஈடுபட்டு கவிதைகள் படைப்பது பாராட்டுக்குரிய பணி.நூல் ஆசிரியர் கவிஞர் வடுவூர் சிவ .முரளி அவர்களின் முதல் தொகுப்பு நூல். முத்தாய்ப்பான நூலாக வந்துள்ளது .பாராட்டுக்கள் .அட்டைப் படத்தில் வருகை பற்றி அறிவுக்கும் விதமாக கத்தும் காகம் புகைப்படம் வருகை பற்றிய அறிவிப்பு என்ற தலைப்பிற்கு பொருத்தம்.நூலை தந்தைக்கு காணிக்கைஆக்கிய விதம் சிறப்பு .தஞ்சாவூர் நா .விச்வநாதன் அணிந்துரை மிக நன்று .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பிரசுரம் செய்த அனைத்து இதழ்களின் பெயரை மற
குடை மறந்த மழை

குடை மறந்த மழை

நூல் ஆசிரியர் : பாவலர் புதுவைத் தமிழ் நெஞ்சன்வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,சென்னை-600 018.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி தமிழ் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வெளியிட்ட பதிப்பகமான மின்னல் கலைக்கூடம் வெளியிட்டுள்ள ஹைக்கூ நூல்.  நூலாசிரியர் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் ஒரே ஒரு ஹைக்கூவின் மூலம் உலகப்புகழ் பெற்றவர். அந்தப் புகழ்பெற்ற ஹைக்கூ இது தான். கொடி தந்தீர் / குண்டூசி தந்தீர் / சட்டை? ‘குடை மறந்த மழை’ என்ற இந்த நூலின் மூலம் பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் உணர்ச்சி மிக்க நல்ல ஹைக்கூ கவிதைகளை வழங்கி உள்ளார். பாராட்டுக்கள். முதுமுனைவர் பேராசிரியர் மித்ரா அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அமைந்துள்ளது. மண்ணில் விழுந்தது / வானம் / மழை வெள்ளம் இந்த ஹைக்கூ படித்தவுடன் சிங்கார சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதித்த சோக நிகழ்வு நம் மனக்கண்
சிறுதுளி (ஹைக்கூக்கள்)

சிறுதுளி (ஹைக்கூக்கள்)

நூல் ஆசிரியர் : நல. ஞானபண்டிதன்வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,சென்னை-600 018.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிபக்கங்கள் : 80, விலை : ரூ.50 நூலாசிரியர் கவிஞர் நல. ஞானபண்டிதன் அவர்களின் அய்ந்தாவது நூல் இது. முதல் ஹைக்கூ கவிதை நூல்.  இவரது படைப்புகளை பல்வேறு சிற்றிதழ்களில் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி. இவரது ஹைக்கூ கவிதைகளை வெளியிட்ட சிற்றிதழ் ஆசிரியர்களின் புகைப்படங்களை நூலின் அட்டையில் பிரசுரம் செய்து புதுமையாக நன்றி செலுத்தி உள்ளார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தாலும் பட்டறிவின் காரணமாக புதுக்கவிதை பயண நூல் ஹைக்கூ கவிதை என எழுதி வருகிறார். ஆடிய மனிதனை      அடிபணிய வைக்கும்      ஆறடி நிலம்!       ‘தான்’ என்ற அகந்தையில் ஆடிய மனிதனை இறந்ததும் ஆறடியில் அடக்கி விடும் இயற்கையின் நிலையை நன்கு உணர்த்தி உள்ளார். புதைத்தால் தான
கண்ணஞ்சல்

கண்ணஞ்சல்

(ஹைக்கூ கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் மல்லிகை தாசன்   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி   வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,சென்னை-600 018. பக்கங்கள் : 80, விலை : ரூ.50 நூலாசிரியரின் இயற்பெயர் தி. பழனிசாமி. புனைப் ப்பெயர் மல்லிகை தாசன்.  மூன்றாவது ஹைக்கூ நூல் இது. கவிஞர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள் அணிந்துரை நல்கி உள்ளார். கவிஞர் கார்முகிலோன் பொன்மன வாழ்த்துரை வழங்கி உள்ளார். பதிப்பாளர் கவிஞர் வசீகரன் பதிப்புரை எழுதி உள்ளார். பொருத்தமான புகைப்படங்களுடன் நேர்த்தியாகப் பதிப்பித்து உள்ளார். பாராட்டுகள். பெண் பஞ்சாயத்து தலைவரின்      கணவர் சொற்படி நடக்கிறது      பஞ்சாயத்து! பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33% (முப்பத்திமூன்று சதவீதம்) சட்டமாக வேண்டும். அரசியலில் பெண்களின் பங்களி
கவிதைத்தேன்!

கவிதைத்தேன்!

நூலாசிரியர் :  முனைவர் அ. கோவிந்தராஜுagrphd52@gmail.comநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிவானதி பதிப்பகம், 23, தீனதயாளன் தெரு, தி.நகர், சென்னை-17.  விலை : ரூ. 120  *****             நூலாசிரியர் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்கள் அப்துல்கலாம் அவர்களின் கரங்களால் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்.  உடலால் மட்டுமன்றி உள்ளத்தாலும் உயர்ந்தவர், பண்பாளர், படைப்பாளர். “கவிதைத்தேன்” என்பது நூலின் பெயர் மட்டுமல்ல காரணப் பெயர் என்றே சொல்லலாம்.  தேன் போன்றகவிதைகளை திகட்டாமல் வழங்கி உள்ளார்கள்.  பாராட்டுக்கள்.  வானதி பதிப்பகத்தின் பெருமைமிகு பதிப்பாக வந்துள்ளது.  எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர்மு.பொன்னவைக்கோ, தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் இருவரின் அணிந்துரையும் நூல் என்ற மகுடத்தில் பதித்திட்ட வைரகற்களாக ஒளிர்கின்றன.        பள்ளியில் முதல்வராகப் பணிபுர
சேது காப்பியம்

சேது காப்பியம்

.சேது காப்பியம் (தலைமுறைக் காண்டம்)நூலாசிரியர் :  பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவிகவியரசன் பதிப்பகம், 31(12) சாயி நகர் இணைப்பு, சின்மயா நகர், சென்னை-92.  விலை : ரூ. 300. தொலைபேசி : 044 2479 8375   va_mu_sethuraman@yahoo.com*****             தமிழ்ப்பணி என்ற இதழின் சிறப்பாசிரியர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் பெரிய மீசைக்காரர் மட்டுமல்ல, பெரிய கவிதைக்காரர்.  இலட்சக்கணக்கில் பாடல்களை எழுதிக் குவித்திடும் கவிதைக் குற்றாலம். மரபுக்கவிதைகள் எழுதுவதில் முடிசூடா மன்னராக வலம் வருபவர். மரபுக்கவிதையில் சேதுகாப்பியம் வடித்துள்ளார்.  முன்னுரையில் தன் வாழ்க்கைச் சுருக்கத்தை மிக உருக்கமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்களின் அணிந்துரை மிக நன்று. சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார் புலவர் செந்தமிழ்ச்செழியன். கவிமுரசு வா.மு.சே. திருவள
மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு

மு .வ .அல்லது முன்னேற்ற வரலாறு

நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி வானதி பதிப்பகம் சென்னை.17 விலை ரூபாய் 60 தமிழ் உன்னை வளர்த்ததுதமிழை நீயும் வளர்க்க வேண்டும் .—-மு .வரதராசன் தமிழ் அறிஞர் மு .வ. அவர்கள் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்களுக்கு எழுதிய மடலின் வைர வரிகளுடன் நூல் தொடங்குகின்றது .வைர வரிகளை தாரக மந்திரமாகக் கொண்டு தமிழ் அணைக்கு அணி சேர்க்கும் விதமாக நூல்களை எழுதி குவித்துள்ளார் .தமிழ்த்தேனீ இரா .மோகன். இவருடைய மற்றொரு நூலிற்கான அணிந்துரையில் சிறந்த எழுத்தாளர் சிந்தனையாளர் முனைவர் வெ.இறையன்பு . இ.ஆ.ப .அவர்கள் குறிப்பிட்டது. முற்றிலும் உண்மை. தமிழ்த்தேனீ இரா .மோகன் அவர்கள் அருகில் அவர் எழுதிய நூல்களை அடுக்கினால் அவரை விட உயரமாக இருக்கும் . 90 நூல்களை எழுதி குவித்தவரின் தரமான நூல் இது .மாமனிதர் தமிழ் அறிஞர் மு .வ.என்ற ஆளுமையின் திறமை ,நேர்மை, எள