Uncategorized

சிறப்பு கவியரங்கம்

Uncategorized
புதியதிசைகள் இணைய வானொலியும் சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா குழுமமும் இணைந்து நடத்தும் சிறப்பு கவியரங்கம் "சிறுமை கண்டு பொங்குவாய்". திசைகள் இணைய வானொலியில் இன்று (05-07-2020) காலை 10:00 மணிக்கும் மாலை 3:00 மணிக்கும் Loading ...
மன்கிபாத்; பிரதமர் இன்று வானொலியில் உரை

மன்கிபாத்; பிரதமர் இன்று வானொலியில் உரை

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் எல்லை விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்விடுதலை !

பெண்விடுதலை !

Uncategorized
கவிஞர் இரா .இரவி எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காதுபெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காதுமண் புழவாய்ப் நெளிந்தது போதும்பெண் புலியாய்ப் புறப்படு நாளும்புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்கொட்டக் கொட்ட குனிந்தது போதும்புராணப்புளுகை நம்பியது போதும்புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும்ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்?பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்?அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும்அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும்ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும்அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும்புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்
விவேகானந்தர் மையங்களில்<br> மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும்

விவேகானந்தர் மையங்களில்
மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும்

Uncategorized
விவேகானந்தர் மையங்களில்மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும் பிரதமருக்கு வைகோ கோரிக்கை 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த உலக சமயங்களின் மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரைதான் உலகம் முழுவதும் அவர் புகழ் பரவக் காரணமாக இருந்தது. “அமெரிக்க சகோதர சகோதரிகளே” என்று விளித்த விவேகானந்தரின் வார்த்தை அந்த மாநாட்டையே உலுக்கியது. விவேகானந்தருக்கு புகழ் மகுடம் சூட்டிய சிகாகோ உலக சமயங்களின் மாநாட்டில் அவர் உரையாற்றுகின்ற உயர்ந்த வாய்ப்பை வழங்கிய பெருமை இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களையேச் சாரும். விவேகானந்தர் மதுரை வந்திருந்தபோது அவரது உரையைக் கேட்ட மன்னர் பாஸ்கரசேதுபதி, விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்புவது என்று முடிவு செய்தார். இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தமிழ
அகிம்சை என்றால் காந்தியடிகள்!

அகிம்சை என்றால் காந்தியடிகள்!

Uncategorized
கவிஞர் இரா. இரவி. அகிம்சை என்றால் காந்தியடிகள். காந்தியடிகள் என்றால் அகிம்சை. உலகம் அறிந்த உண்மை காந்தியடிகளின் அகிம்சை தத்துவத்திற்கு காரணியாக அமைந்தது திருக்குறள். இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். குறள் 314 (இன்னா செய்யாமை) இந்தத் திருக்குறளை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் டால்சுடாய். காந்தியடிகளின் குரு டால்சுடாய்! டால்சுடாயின் குரு திருவள்ளுவர்! எட்டி உதைத்த சிறை அலுவலருக்க்கு காலணி தைத்துக் கொடுத்த உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் காந்தியடிகள். இது அன்று உண்மையில் நடந்த நிகழ்வு. ஆனால் இன்றோ, எட்டி உதைத்தால் வெளியே வந்து காலை வெட்டி விடும் அவல நிலை. பலிக்குப் பலி வாங்கும் வக்கிர குணம் எங்கும் பெருகி விட்டது. அகிம்சை, சகிப்புத்தன்மை, பொறுமை இழந்து விட்டனர். எந்த ஒரு தாயும் தன் குழந்தையைக் கொல்ல மாட்டாள். ஆனால் இன்று பெற்ற குழந்தைகளை தாயே கொல்கின்
ஆழாக்கு

ஆழாக்கு

Uncategorized
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோயில் ராஜாமதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி ‘உருவம் சிறியது,உவப்பு பெரியது.’ அணிந்துரையில் திரு.வசீகரன் அவர்கள் குறிப்பிட்டது போல ஹைக்கூ கவிதைகள் உருவத்தில் சிறியது, கருத்தி;ல் பெரியது. “ஆழாக்கு”என்ற பழைய அளவைக் கருவியை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் விதமாக இப்பெயரைச் சூட்டியதாக நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோயில் இராஜா குறிப்பிட்டுள்ளார். இருபது ரூபாயில் சிந்தனைச் சிதறல், ஹைக்கூ அதிர்வுகள். இலக்கிய உலகில் ஓய்வின்றி தொடர்ந்து இயங்கி வரும் இரட்டைக் குழல் துப்பாக்கி திரு.வசீகரன், திரு.கன்னிக்கோயில் இராஜா. கம்பருக்கு சடையப்ப வள்ளல் என்பார்கள், பார்த்தது இல்லை.ஆனால் கன்னிக்கோயில் இராஜா என்ற கம்பருக்கு சடையப்ப வள்ளல் திரு.வசீகரன். பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் பார்த்து இருக்கிறேன், பழகி இருக்கிறேன். நூல் எழுதிட, வெளியிட இருவருமே தயங்காதவர்கள். மாதந்
மௌனம் பேசியதே

மௌனம் பேசியதே

Uncategorized
மென்மகள் பாதம் நோகமெல்லவே கடந்து செல்ல,நன்மலர் பூக்கும் என்னில்நனைந்ததே இதயம் தேனில்!!என்மனம் என்னை விட்டுஏங்கியுன் முன்னே நிற்க,இன்னிசை கீதம் காதில்இனிமையாய் கேட்கும் கண்ணே!! பன்மணி ஓசை போலபேசிடும் குரலைப் பெற்றாய்!இன்சுவை மிகவே எந்தன்இயற்பெயர் கூறு தேனே!!என்மனம் உந்தன் இல்லம்.என்றுரை அன்பே கண்ணால்…உன்நிழல் நானே என்றும்உன்கரம் கோர்த்து வாழ்வேன்!! மன்மதன் எய்த அம்பால்மாசறு காதல் கற்றேன்மின்சுமை முறுவல் என்னில்மின்னொளி பாய்ச்சக் கண்டேன்அன்றிலாய் வாழும் நாளில்அன்பினில் பொங்கும் உள்ளம்தன்னிதழ் திறந்து பேசும்.தளிர்கொடி தவழும் கையில்.. - சு.வி.லட்சுமி
ஆற்றித் தேற்று

ஆற்றித் தேற்று

Uncategorized
அருகிலே நீயும் இல்லைஆறுதல் மொழியும் இல்லைநெருப்பிலே இதயம் வீழநெகிழியாய் நைந்தே போனேன்குருவியின் பதட்டம் போலகுழம்பியே கலங்கிச சாய்ந்தேன்வரும்துயர் எண்ணிப் பார்த்துவாழ்வினை வெறுத்தேன் கந்தா. தெருவிலே புழுதி போலதேடினேன் எங்கும் உன்னைகரும்பிடை சாறைப் போலகலந்திடப் பிறந்தேன் இங்கேஅருந்தவம் புரிந்தேன் வேலாஅழுதிடும் விழிநீர் காயஒருவரம் தரவே வாராய்ஒன்றினேன் தலைவா உன்னில் - சு.வி.லட்சுமி
கனமழை: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

Uncategorized
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி: உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.* அதிக மழைப்பொழிவு காரணமாக நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு. கனமழை காரணமாக புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை  விடுமுறை அறிவிப்பு. *ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை:* தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. தொடர் மழை காரணமாக ராமநாதபுரம், குமரி, துத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை  என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்