Uncategorized

ABOUT US

Uncategorized
எழுத்துலக நண்பர்களின் படைப்புகளை உலகிற்கு அரங்கேற்றும் முயற்சிதான் புதிய திசைகள், இந்த இணையத்தில் உள்ளூர் ஊடக நண்பர்கள் தரும் தகவல்களின் அடைப்படியில் செய்திகளும் படைப்பாக்கங்களும் பரிமாறப்படுகிறது. இத்தளத்தில் வெளியாகும் செய்திகள் மற்றும் படைப்புக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்

Uncategorized
திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குழந்தையின் பெற்றோருக்கு சொந்தமான தோட்டத்தில் 5 ஆண்டுக்கு முன்பு போர்வெல் தோண்டப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்ட நிலையில், மழைப்பொழிவால் தற்போது மீண்டும் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 68 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது. கிணற்றில் விழுந்தபோது 26 அட

மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள்

Uncategorized
மகாராஷ்டிரா, அரியானா தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், இரு மாநிலத்திலும் பாஜக முன்னிலை வகித்து  வருகிறது. இருப்பினும் 11 மணிக்கு மேல் முன்னிலை நிலவரம் விரிவாக தெரியவரும். எனினும் தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில்172 இடங்கள் முன்னிலை வகிக்கிறது.

அபிஜித் பானர்ஜி பிரதமருடன் சந்திப்பு

Uncategorized
பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார். பல்பலதுறைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளி மறுநாள் அரசு விடுமுறை என அறிவிப்பு

Uncategorized
சென்னை: தீபாவளி மறுநாள் திங்கள் கிழமை அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9-ம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

காதலின் வானிலை !

Uncategorized
காதலின் வானிலை எப்போதும் முழுநிலவுதான் காதல் உணர்வு சொல்லில் அடங்காது ! காதலித்துப் பாருங்கள் வானில் பறக்கலாம் காதலி கண்ணிலும் உள்ளத்திலும் இருப்பாள் ! இன்பரசம் எப்போதும் இருப்பாக இருக்கும் இனிய நினைவுகள் அலைஅலையாய் வரும் ! காதல் மூன்று எழுத்து மோக மந்திரம் கனிச்சாறாக இனித்திடும் இன்ப நினைவு ! சிறகுகள் இன்றி வானில் பறக்கலாம் சிந்தனையில் மூழ்கி முத்து எடுக்கலாம் ! உண்மையான காதலை உடன் அங்கிகரியுங்கள் உலகில் ஒழிய வேண்டும் ஆணவக் கொலைகள் ! காதலித்ததற்காக கொல்வதை உடன் நிறுத்துங்கள் காதலை ஏற்கும் மனநிலை பெற்றிடுங்கள் ! பிள்ளைகள் காதலித்தால் பெற்றோர்கள் தற்கொலை படித்துப் பார்த்தல் புரிந்திடும் மடமைகள் ! சாதி மதம் பார்ப்பதை உடன் நிறுத்துங்கள் சந்தோசமாக பிள்ளைகளை வாழ்ந்திடவையுங்கள் ! காதலித்து மணமுடித்தால் வாழ்க்கை இனிக்கும் காதலுக்குப் பச்சைக் கொடியைக்

காஞ்சிபுரம் வேகவதி ஆறு சீரமைக்கப்பட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வை

Uncategorized
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் காஞ்சிபுரம் வேகவதி ஆறு சீரமைக்கப்பட்ட பணியினை மாவட்ட ஆட்சியர் திரு.பொன்னையா  இன்று  பார்வையிட்டார், இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் கூடுதல் பொறுப்பு மகேந்திரன் நகராட்சி  பொறியாளர் உடன் இருந்தார்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது: மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது: மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்! விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேரணியில் பேசுகையில்., அதிமுக ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. தமிழகத்தில் கொலை - கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1996-ம் ஆண்டு ஜெயல‌லிதா மீது சொத்து குவிப்பு வழக்கு போட்டவர் சுப்பிரமணியசாமி தான், அதை முதல்வர் திரித்து சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நடந்த சாதனைகள், திட்டங்கள் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரத்தில் பேசுவதற்கு தயா

தில்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம்

Uncategorized
தில்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுக்கூட்டம், அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் தொடங்கியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரியின் பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்களது தரப்பு புள்ளி விவரங்களை சமர்ப்பிக்கின்றனர்.