Uncategorized

தூத்துக்குடியில் விடிய விடிய மழை

தூத்துக்குடியில் விடிய விடிய மழை

Uncategorized
தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் இடைவிடாது பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இமயமலை புறப்பட்டார் ரஜினி

இமயமலை புறப்பட்டார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். புதிதாக சன் பிக்சர்ஸ் எடுக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ள நிலையில் அவர் இமயமலைக்கு 5 நாட்கள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்ற அவர் அங்கிருந்து டேராடூன் செந்று அங்கு சில மணி நேரம் ஓய்வெடுத்த பின்னர் சாலை மார்க்கமாக ரிஷிகேஷ் சென்றார். அங்குள்ள பாபா குகையில் தங்குகிறார்.
நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

ஆந்திராவில் 10 ஆயிரத்திற்கும் மேல் காய்ச்சல் பாதிக்கபட்ட நபர்கள் உள்ளனர். இதனை ஒப்பிடும் வகையில் தமிழகத்தில் குறைவு என அமைச்சர் கூறியுள்ளார். இதுகுறித்து நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்த போது கூறியதாவது:- டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது காய்ச்சல் இருப்பவர்களை கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிப்பதால் தான் எண்ணிக்கை உள்ளது. 5 நாட்கள் வரை காய்ச்சல் இருப்பவர்களை மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள். கூடுதல் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். அனைத்து மருத்துவனைகளிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளது.மனசாட்சியில்லாமல் ஸ்டாலின் பேசுவது கண்டனத்திற்கு கூறியது. அரசு புள்ளி விபரங்களை மறைக்கவில்லை.அரசை குறித்து குறை சொல்ல தகுதி கிடையாது. கடந்த மூன்ற
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்: பொன்.ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி 3 நாள் பயணமாக வருகை தரவிருக்கின்றனர். அப்போது இருநாடுகளின் உறவு தொடர்பாக முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரின் வருகை தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இரு தலைவர்கள் வருகைக்குபின் மாமல்லபுரம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறும் என்று தெரிவித்தார்.
தியாகி சுப்பிரமணிய சிவாவின் 136வது பிறந்த நாள்

தியாகி சுப்பிரமணிய சிவாவின் 136வது பிறந்த நாள்

Uncategorized
சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 136வது பிறந்த நாளையொட்டி தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அவர் மணி மண்டபத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டான்

Uncategorized
திருச்சி: லலிதா ஜூவல்லரி திருச்சி கிளையில் சுவரில் துளையிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்களின் ஒருவர், வாகன சோதனையின் போது பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடினான் 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்டன. லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இரவு நேரத்தில், நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடினார். 2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, 'பார் கோடு' மூலம் தெரியவந்துள்

சினிமா பாணியில்திருச்சி பிரபல கொள்ளை!

Uncategorized
திருச்சியிலுள்ள பிரபல நகைக்கடையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை: ஹாலிவுட் சினிமா பாணியில் திட்டமிட்டுத் துணிகரம்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடையான எல் என துவங்கும் ஜுவல்லரியில் ஹாலிவுட் பாணியில் சுவரில் துளையிட்டு, சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ளது பிரபல நகைக்கடையான எல் என துவங்கும் ஜுவல்லரி. திருச்சி நகரத்தின் மிகப் பிரபலமான பெரிய நகைக் கடை இது. பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான இந்த நகைக் கடைக்கு திருச்சி நகரம் முழுவதும் வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். இதனால் நூற்றுக்கணக்கான பணியாளர்கள், காவலாளிகள், கண்காணிப்பு கேமராக்கள் என எந்நேரமும் பரபர
தமிழகம்- புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம்- புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதியில் நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வேதநத்தம் பகுதியில் 4cm மழையும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
தூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை பாரதி நினைவு நாள்

தூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை பாரதி நினைவு நாள்

Uncategorized
தூத்துக்குடியில் வரும் சனிக்கிழமை நடைபெறும் பாரதி நினைவு நாள் நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொள்கிறார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட பாரதி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ரமேஷ், விநாயகமூர்த்தி, பி.எஸ்.கே. மாரியப்பன், ஜெயக்குமார் ஆகியோர் புதன்கிழமை கூட்டாக அளித்த பேட்டி:தூத்துக்குடி மாவட்ட பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில், மகாகவி பாரதியாரின் 98 -ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி, தூத்துக்குடி அபிராமி மகாலில் வரும் சனிக்கிழமை (செப். 28) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு, அழகர் நிறுவனங்கள் குழுமத் தலைவர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். சிறப்பு அழைப்பாளராக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு பேசுகிறார்.
விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள்

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள்

Uncategorized, விவசாயம்
வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானியத்தில் வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைத்தல் ஆகிய பணிகள் ரூ.9.37 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளன.அதன்படி, நடப்பு ஆண்டில் (2019-20) 239 டிராக்டர்கள், 10 பவர்டில்லர்கள், 2 வைக்கோல் கட்டு கட்டும் கருவி, 1 விசைக் களையெடுப்பான், 3 பல்வகைப் பயிர் கதிரடிக்கும் இயந்திரம், 10 கொத்துக் கலப்பைகள், 11 திரும்பும் கலப்பைகள், 63 ரோட்டவேட்டர், 2 விதை விதைப்புக் கருவிகள் ஆகியவற்றை மானியத்தில் வாங்கிட ரூ.8. 77 கோடியும், 6 வாடகை மையங்கள் அமைக்க ரூ.60 லட்சமும் மாவட்ட