அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டியின் 2024 விருது வழங்கும் விருந்திற்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்து

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 15ஆம் நாள், அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டியின் 2024ஆம் ஆண்டு விருது வழங்கும் இரவு விருந்திற்கு வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார்.


சீனா மற்றும் அமெரிக்காவின் பல்வேறு துறைகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்புக்கு இக்கமிட்டி வழங்கியுள்ள முயற்சிக்கு அவர் வெகுவாக பாராட்டு தெரிவித்தார். விருது பெறும் வில்லியம் யி ஃபோர்டுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.


சீன-அமெரிக்க உறவு, உலகில் மிக முக்கியமான இரு தரப்புறவுகளில் ஒன்றாகும். இது, இரு நாட்டு மக்களின் நலன்கள் மற்றும் மனிதக் குலத்தின் முன்னேற்றத்துடன் நெருக்கமாகத் தொடர்புடையது. அமெரிக்காவுடன் கூட்டாளியாகவும் நண்பராகவும் இருக்க சீனா விரும்புகிறது.

இது, இரு நாடுகளுக்கும் உலகத்திற்கும் நன்மை பயக்கும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
அதே நாளில், அமெரிக்க அரசுத் தலைவர் பைடனும் இக்கமிட்டிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

You May Also Like

More From Author