தூதாண்மை உறவுகளைக் கொண்ட அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வரி விலக்கு அளிக்கும் சீனா

சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டின் மே 1ஆம் நாள் முதல் 2028ஆம் ஆண்டின் ஏப்ரல் 30ஆம் நாள் வரை, சீனாவுடன் தூதாண்மை உறவுகளை நிறுவியுள்ள மிகக் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இல்லாத 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கு, சலுகை சுங்கவரி விகிதம் வழியாக வரி விலக்கு கொள்கையை சீனா அமல்படுத்தும்.

சீனாவுடன் தூதாண்மை உறவுகளை நிறுவியுள்ள 33 மிகக் குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சீனா 2024ஆம் ஆண்டின் டிசம்பர் முதல் வரி விலக்கு அளித்துள்ளது. இம்முறை மேலும் 20 ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் வரி விலக்கு சலுகை, உயர்மட்டத் திறப்பை சீனா விரிவுபடுத்தும் ஆக்கப்பூர்வமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, சீனா-ஆப்பிரிக்கா பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதிய யுகத்தில் சீனா-ஆப்பிரிக்கா பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை ஊக்குவிக்கவும் முக்கியமாக பங்காற்றும்.

Please follow and like us:

You May Also Like

More From Author