ஜெஜிங்யாங் மாநிலத்தன் தலைநகர் ஹாங்சோவில் 2026 சீனத் தேசிய சேவை நுகர்வு பருவம் மற்றும் ஜெஜியாங்கின் உணவு ஹாங்சோவின் சுவாரஸ்யம் என்ற தலைப்பிலான உணவுகள் கண்காட்சி, இம்மாநிலத்தின் தலைநகர் ஹாங்சோவில் நடைபெற்றது.
சீன வணிக அமைச்சகமும், சீன ஊடக குழுமும் இணைந்து இந்த சேவை நுகர்வு நிகழ்ச்சியை நடத்தின.
சேவை நுகர்வு என்பது, சீனாவின் உள்நாட்டு நுகர்வுச் சந்தையில் முக்கிய அங்கமாக விளங்குகிறது. மக்களின் வாழ்வாதாரத் தேவையை நிறைவு செய்வது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட துறைகளில் சேவை நுகர்வானது முக்கிய பங்காற்றி வருகிறது.
எதிர்காலத்தில், தனிப்பயனாக்கம், அனுபவங்களை பெறுதல், டிஜிட்டல் மயமாக்கம், ஒருங்கிணைப்பு, சமூக தொடர்பு, கொள்கை முறைப்படுத்தல் ஆகிய 6 திசைகளுக்கு சேவை நுகர்வு தொடர்ந்து விரிவடைந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
