“1000% உழைக்கத் தயாரா இருக்கேன்” கைதி 2 பட வாய்ப்பு சாம் சி.எஸ்ஸுக்கு கிடைக்குமா….?அவரே ஓபனாக சொன்ன தகவல்….!! 

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி பிஜிஎம் (Background Score) மூலம் கோடி கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கைதி 2’ திரைப்படத்தின் இசை வாய்ப்பு குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘கைதி 2’ படம் குறித்துப் பேசிய சாம் சி.எஸ், “கைதி 2 படத்தின் இசை வாய்ப்பு எனக்கு வந்தால், அதற்காக எனது 1000% உழைப்பைக் கொடுத்து மிகச் சிறந்த இசையைத் தரத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒருவேளை ஏதேனும் காரணங்களால் அந்த வாய்ப்பு எனக்கு வரவில்லை என்றாலும், அதற்காக நான் சிறிதும் வருத்தப்பட மாட்டேன்” என மிகவும் யதார்த்தமாகவும் கெத்தாகவும் பதில் அளித்துள்ளார்.

மேலும் தனது அடுத்தடுத்த திரைப்பட ப்ராஜெக்ட்டுகள் குறித்துப் பகிர்ந்த அவர், பிரபல இயக்குநர் ஹெச். வினோத் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்குத் தாம் தற்போது தீவிரமாக இசையமைத்து வருவதாகவும், அதுமட்டுமன்றி ஹெச். வினோத் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படத்திற்கும் தாம் இசையமைப்பாளராகக் கமிட்டாகியுள்ளதாகவும் கூறி ரசிகர்களுக்குப் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ‘கைதி 1’ படத்தின் வெற்றிக்கு சாம் சி.எஸ்ஸின் இசையே முக்கிய காரணம் என்பதால், ‘கைதி 2’ படத்திலும் அவரே இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

You May Also Like

More From Author