“விமானத்தில் திடீரென வெடித்த பவர் பேங்க்!” நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்தில் நடந்த பயங்கரம்…. டிஜிசிஏ வெளியிட்ட அதிரடித் தடை…!!” 

Estimated read time 1 min read

இண்டிகோ விமானத்தில் பயணித்த ஒருவரின் பவர் பேங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட ‘மொபிகின்ஸ் எம்கே-பிபி-04’ மாடல் பவர் பேங்க்கை விமானங்களுக்குள் எடுத்துச் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் விமானப் பயணத்திற்குத் தயாராகும் முன் தங்களது பவர் பேங்கின் மாடலைச் சோதித்துப் பார்ப்பது அவசியமானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 11, 2026 அன்று டெல்லியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில், மேல் பகுதியில் உள்ள லக்கேஜ் கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்பட்டிருந்த பயணியின் பவர் பேங்கில் திடீரெனத் தீப்பிடித்துப் புகை பரவியது.

பாதுகாப்பு கருதி உடனடியாக அந்த விமானம் ஹைதராபாத்திற்குத் திசை திருப்பப்பட்டுப் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் 191 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் எந்தவித காயமுமின்றித் தப்பினர்.

இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்திற்கொண்ட டிஜிசிஏ, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் அனைத்திலும் ‘MOBIKINS MK-PB-04’ மாடல் பவர் பேங்க்குகளைக் கொண்டு செல்லத் தடை விதித்துள்ளது. இந்தத் தடை கேபின் பேக்கேஜ், செக்-இன் பேக்கேஜ் மற்றும் கார்கோ என அனைத்து முறைகளுக்கும் பொருந்தும் என்றும், விமான நிறுவனங்கள் இதைக் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், அனைத்துப் பவர் பேங்க்குகளுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்பதால் மற்ற பிராண்ட் பயனர்கள் அச்சப்படத் தேவையில்லை.

எவ்வாறாயினும், பவர் பேங்க் வீங்கிப்போயிருந்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பமாக இருந்தாலோ அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், விமானப் பாதுகாப்பு விதிகளைப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

You May Also Like

More From Author