விஜயதசமி அன்று காலை 11 மணிக்கு மேல் பழனி கோயிலுக்குள் அனுமதி இல்லை

Estimated read time 1 min read

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வரும் 20.10.2026 விஜயதசமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Image

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “வரும் 20-ம் தேதி விஜயதசமி அன்று மலைக்கோயிலில் நண்பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், அதனை தொடர்ந்து பிற்பகல் 01.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் பிற்பகல் 02.45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு நடைபெற்று சன்னதி திருக்காப்பிடப்படும். பராசக்தி வேல் கோதைமங்கலம் சென்று அம்பு போட்டு புறப்பாடாகி மலைக்கோயிலுக்கு திரும்ப வந்த பின் இராக்கால பூஜை நடைபெறும். இதனால் மலைக்கோயிலில் அனைத்து கட்டணச்சீட்டுகள் விற்பனையும் காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும். எனவே அன்றைய தினம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author