அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி: டி.ஆர்.டி.ஓ. தலைவர் தகவல்!

Estimated read time 1 min read

அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதியைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் டாக்டர் சமீர் வி காமத், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியால் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏவுகணைகளை தரையில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், விமானங்களின் மூலமும் ஏவ முடியும். ஆகவே, இந்த ஏவுகணைக்கு உலகளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

ஆகவே, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கிறன.

இதையடுத்து, மேற்கண்ட நாடுகளுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்யவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், 2025-ம் ஆண்டுக்குள் பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி மூலம் 41,500 கோடி ரூபாய் வருவாய் இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

, இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த டி.ஆர்.டி.ஓ. தலைவர் டாக்டர் காமத், “ஆயுதப்படைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய LCA Mk-1A, அர்ஜுன் Mk-1A, QRSAM மற்றும் ஆகாஷ் ஏவுகணை அமைப்பு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது.

அடுத்த 10 நாட்களுக்குள் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்ட தரை அமைப்புகளின் ஏற்றுமதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கப்பல் ஏவுகணைகளும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்” என்று கூறியிருக்கிறார்.

சுமார் 4.94 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள், வெற்றிகரமாக defence acqusition council மூலம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், அவற்றின் துல்லியம் மற்றும் வேகத்திற்காக புகழ்பெற்றவை.

அவை நவீன போரில் ஒரு வல்லமைமிக்க சொத்தாக கருதப்படுகிறது. தரை அமைப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கையானது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், அதன் தொழில்நுட்ப வல்லமையை உலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கும் உறுதியளிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரபல விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைவருமான அதுல் தினகர் ரானே கூறுகையில், “பிரம்மோஸ் ஏவுகணை 2004-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தபோது 13 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உதிரி பாகங்கள் இருந்தன. ஆனால், கடந்த 19 ஆண்டுகளில் இது 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், 100 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பாக இந்த ஏவுகணையை தயாரிக்க முடியாது. ஏனெனில், பிரம்மோஸ் ஏவுகணை என்பது ரஷ்யா மற்றும் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் கூட்டு திட்டமாகும். மேலும், ரஷ்யாவின் ஒரு சில தொழில்நுட்பங்களை நாம் சார்ந்துள்ளதால் 100 சதவீதம் எட்ட முடியாது. 75 சதவீத உள்நாட்டு தொழில்நுட்பங்களால், பிரம்மோஸ் ஏவுகணையின் ஒட்டுமொத்த விலை வெகுவாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author